பீகார் சட்டமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியைத் தக்க வைத்துள்ளது.
பீகாரில் மொத்தம் 243 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இம்மாநிலத்தில் ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மை இடங்கள் 122.
பீகாரில் நவம்பர் 6, நவம்பர் 11-ல் 2 கட்டங்களாக நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று நவம்பர் 14-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
இன்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி தொடர்ந்து முன்னிலை வகித்தது. ஆர்ஜேடி- காங்கிரஸ் கூட்டணி பெரும் தோல்வியை சந்தித்துள்ளது.
பீகார் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் முழுமையாக – கட்சிகளும் வென்ற இடங்களும்
- பாஜக – 89
- ஜேடியூ- 85
- ஆர்ஜேடி – 25
- எல்ஜேபி- 19
- காங்கிரஸ்- 6
- மஜ்லிஸ் கட்சி -5
- அவாமி மோர்ச்சா – 5
- ஆர்எல்எம் -4
- சிபிஐ எம்எல் (விடுதலை) 2
- சிபிஎம்- 1 இடத்தில் வெற்றி
- பகுஜன் சமாஜ் 1
- ஐஐபி- 1
கட்சிகளின் வாக்கு சதவீதம்
- ஆர்ஜேடி 23.00%
- பாஜக 20.58%
- ஜேடியூ 19.25%
- காங்கிரஸ் 8.71%
- எல்ஜேபி 4.97%
- சிபிஐ எம்எல் (எல்) 2.84%
- மஜ்லிஸ் கட்சி 1.85%
- பகுஜன் சமாஜ் கட்சி 1.62%
