“பாடகி சுசித்ரா மனநோயாளி”: மறைமுகமாக சாடிய வைரமுத்து

Published On:

| By Kumaresan M

மலையாள சினிமா போல தமிழ் திரையுலகிலும் ஏராளமான பாலியல் சீண்டல்கள் நடப்பதாக பாடகி சுசித்ரா அண்மையில் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டி ஒன்றில் குற்றச்சாட்டை முன்வைத்தார். குறிப்பாக கவிஞர் வைரமுத்து மீது சுசித்ரா கூறிய  புகார்கள் கோலிவுட்டில் சர்ச்சையை ஏற்படுத்தியது.

வைரமுத்து குறித்து சுசித்ரா கூறியதாவது, ”மே மாசம் 98-ல் மேஜர் ஆனேன் பாடலை பாடியபோது கவிஞர் வைரமுத்து தனக்கு  போன் செய்தார். உங்கள் வாய்ஸ்ல ஒரு காமம் இருக்குமா , அதைக்கேட்டால் காதல் வருதும்மா என்று கூறினார்.

பின்னர், ஒருமுறை பரிசு கொடுக்க வேண்டும் என்று என்னை வீட்டுக்கு அழைத்தார்.  நான் எனது  பாட்டியுடன் வந்ததை பார்த்ததும் நீங்க தனியா வருவீங்கனு நினைச்சேன் என்று வைரமுத்து சொன்னார்.

அப்போது, அவரிடத்தில்  ஏதோ பரிசு தரப்போகிறேன்னு சொன்னீர்களே என்று நான் கேட்டேன்.  இந்த கேள்வியை எதிர்பார்க்காத அவர்,   வீட்டில் இருந்து இரண்டு ஷாம்பூ பாட்டில்களை எடுத்து வந்து கொடுத்தார்” என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், சுசித்ராவின் குற்றச்சாட்டுக்கு மறைமுகமாக பதிலடி கொடுத்துள்ளார் வைரமுத்து. இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், “வாழ்வியல் தோல்விகளாலும், பலவீனமான இதயத்தாலும், நிறைவேறாத ஆசைகளாலும் மன அழுத்தத்திற்கு ஆளாகி  அதன் உச்சமாய் மூளைப் பிறழ்வுக்கு ஆளாகும் சிலர் ஒருதலையாய் நேசிக்கப்பட்டவர்கள் மீது வக்கிர வார்த்தைகளை உக்கிரமாய் வீசுவர்; தொடர்பற்ற மொழிகள் பேசுவர், பைத்தியம்போல் சிலநேரமும் பைத்தியம் தெளிந்தவர்போல் சிலநேரமும் காட்சியளிப்பர்.

தம்மைக் கடவுள் என்று கருதிக்கொள்வர். இந்த நோய்க்கு ‘Messianic Delusional Disorder’ என்று பெயர். அவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் அல்லர்; இரக்கத்திற்குரியவர்கள்; அனுதாபத்தால் குணப்படுத்தக் கூடியவர்கள். உளவியல் சிகிச்சையும் மருந்து மாத்திரைகளும் உண்டு. உரிய மருத்துவர்களை அணுக வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

எம்.குமரேசன்

இந்தியாவிலேயே அதிக விலை கொண்ட விமானம்… அம்பானி வாங்கியது ஏன்?

உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி? – செய்தியாளர் கேள்விக்கு டென்ஷனான ரஜினி

 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share