அமைச்சர் உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட இருப்பதாக செய்திகள் வருகிறதே. இதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்? என்று செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு, அரசியல் தொடர்பான கேள்விகளை என்னிடம் கேட்காதீர்கள் என்று நடிகர் ரஜினிகாந்த் இன்று (செப்டம்பர் 20) காட்டமாக பதிலளித்துள்ளார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகி வரும் கூலி படத்தின் படப்பிடிப்பு ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் நடைபெற்று வருகிறது. இந்த படப்பிடிப்பில் பங்கேற்றுவிட்டு, நடிகர் ரஜினிகாந்த் இன்று (செப்டம்பர் 20) காலை சென்னை விமான நிலையம் வந்தடைந்தார்.
அப்போது அவரிடம், “அமைச்சர் உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட இருப்பதாக சொல்லப்படுகிறது. இதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?” என்று செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.
இதனால் கோபமடைந்த ரஜினி, அந்த செய்தியாளரைப் பார்த்து, “அரசியல் கேள்விகளை என்னிடம் கேட்காதீர்கள் என்று எத்தனை தடவை சொல்லியிருக்கிறேன்” என்று விரலை உயர்த்தியபடி காட்டமாக பேசினார்.
தொடர்ந்து வேட்டையன் படம் எப்படி வந்திருக்கிறது என்ற கேள்விக்கு, “படம் நல்லா வந்துருக்கு. என்னை டிஃபரண்டான ஒரு கேரக்டரில் பார்க்கலாம்” என்று தெரிவித்துவிட்டு காரில் ஏறி சென்றார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
நெஞ்சு வலி வரும் அளவுக்கு பணி கொடுத்த மேலாளர்!- இளம் பெண் இறப்பில் அதிர்ச்சி தகவல்கள்!
மீண்டும் ரூ.55,000-ஐ கடந்த தங்கம் விலை… நகைப்பிரியர்கள் ஷாக்!