பாஜகவுடன் இம்மியளவும் மதிமுக கூட்டணி வைக்காது; திமுக கூட்டணியில் இருந்து மதிமுக வெளியேறப் போவதாக ஊடகங்கள் அபாண்டமாக செய்திகளை வெளியிட்டு வருகின்றன என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று ஆகஸ்ட் 1-ந் தேதி முதல்வர் ஸ்டாலினை வைகோ, துரை வைகோ எம்பி உள்ளிட்டோர் சந்தித்து நலம் விசாரித்தனர்.

இந்த சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதாவை முதல்வர் ஸ்டாலின் நேற்று சந்தித்தை தொடர்ந்து திமுக கூட்டணியில் இருந்து மதிமுக வெளியேறுகிறது; பாஜக- அதிமுகவுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்துகிறது என சில ஊடகங்கள் அபாண்டமாக செய்திகள் வெளியிட்டுள்ளன. மதிமுக ஒருபோதும் பாஜகவுடன் இம்மியளவும் உறவு வைத்துக் கொள்ளாது என்றார்.