ஹெல்த் டிப்ஸ்: திடீர் தூக்கமின்மை… தூக்க மாத்திரைகளைப் பயன்படுத்துபவரா நீங்கள்?

Published On:

| By Selvam

சிலருக்கு தற்காலிகமாக தூக்கமின்மை பிரச்சினை ஏற்படும். இது இயல்பு வாழ்க்கையைப் பெரிதும் பாதிக்கும் நிலையில் தற்காலிகமாக தூக்க மாத்திரைகள் எடுத்துக்கொள்வார்கள். இது சரியான தீர்வா? இன்டர்னல் மெடிசின் எக்ஸ்பெர்ட்ஸ் பதில் என்ன?

‘‘தூக்க மாத்திரைகளைப் பொதுவாக மருத்துவர்கள் பரிந்துரைப்பது இல்லை. நோயாளிக்கு தூக்கக் குறைபாடு இருக்கிறது என்பது போன்ற மிகவும் அரிதான சூழலில் மட்டுமே தூக்க மாத்திரைகளை மருத்துவர் பரிந்துரைப்பார்.

தூக்க மாத்திரை நாளடைவில் அதன்மீது பழக்கத்தையும் உண்டாக்கிவிடும் வாய்ப்பும் உண்டு. ஒரு கட்டத்தில் தூக்க மாத்திரை எடுத்துக் கொண்டால்தான் தூங்க முடியும் என்கிற சூழலும் உடலுக்குப் பழகிவிடும்.

இதில் இன்னொரு பிரச்சினையாக ஏற்கெனவே கொடுக்கும் டோஸ் அளவு நாளடைவில் தூக்கத்தை வரவழைக்காமல் போகலாம். இதனால் டோஸ் அளவையும் அதிகரிக்க வேண்டியிருக்கும். எனவே, முடிந்தவரை தூக்க மாத்திரைகளைத் தவிர்க்கவே மருத்துவர்கள் முயற்சி செய்வார்கள்.

ஒருவருக்கு தூக்கம் வரவில்லை என்றால் எதனால் அந்தப் பிரச்னை வந்தது என்கிற காரணத்தைக் கண்டறிந்து அதனை சரி செய்ய வேண்டும். மன அழுத்தம், பதற்றம் போன்ற பிரச்னைகள் இருந்தாலும் தூக்கம் பாதிக்கப்படும். அதிக நேரம் எலக்ட்ரானிக் திரைகளைப் பயன்படுத்துவது, தூக்கத்தில் நேர ஒழுங்கின்மையைக் கடைப்பிடிப்பது போன்ற சாதாரண காரணங்களால்கூட தூக்கமின்மை ஏற்படலாம்.

எனவே, காரணத்தைக் கண்டறிந்து அதற்கேற்ற சிகிச்சையை வழங்க வேண்டும். அப்படி வாழ்க்கை முறை மாற்றங்களால் பலன் இல்லை என்கிற சூழலில் தூக்க மாத்திரைகள் கொடுப்பதாக இருந்தாலும் அதனை மிகவும் குறுகிய காலத்துக்கானதாக மட்டுமே மருத்துவர் பரிந்துரைப்பார். அதன்படி செயல்படுங்கள்” என்கிறார்கள்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிச்சன் கீர்த்தனா: க்ளோ ஸ்கின் லட்டு

கார்த்திகை மாத நட்சத்திர பலன்கள்: உத்தரம்!

பெர்த்தில் முக்கிய வீரர் இல்லாமல் களமிறங்கும் இந்திய அணி : கங்குலி வருத்தம்!

கார்த்திகை மாத நட்சத்திர பலன்கள் (16.11.2024 – 15. 12.2024) : கிருத்திகை!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share