தி கிரேட் எஸ்கேப்… அப்டேட் குமாரு

Published On:

| By Selvam

நண்பர் ஒருத்தர் கூட இன்னைக்கு டீ குடிக்க போயிருந்தேன்…

டீ கடை டிவியில அதிமுக விக்ரவாண்டி தேர்தல் புறக்கணிப்புன்னு ஃபிளாஷ் நியூஸ் போய்க்கிட்டு இருந்துச்சு…

இதை பார்த்த நம்ம நண்பர், “பார்த்தீங்களா எடப்பாடியோட தேர்தல் வியூகத்த… 11-வது முறையா தோல்வியை சந்திக்கிறதுக்கு பதிலா ஒரேடியா பல்டி அடிச்சிட்டாருன்னு” சொன்னாப்ல…

“ஆமாமா… பதினோரு தோல்வி பழனிசாமின்னு திமுககாரங்க டிரெண்ட் பண்ணாம இருக்க சாதுர்யமா முடிவு எடுத்துருக்காருன்னு” ஜாலியா கமெண்ட் அடிச்சேன்…

நீங்க அப்டேட்ஸ் பாருங்க…

ச ப் பா ணி

புரிஞ்சிருச்சானு கேட்டால்.. நீ சொல்லி எப்ப எனக்கு புரிஞ்சிருக்கு என்பதிலேயே சிலர் தலையாட்டல் இருக்கும்

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?

புதுப்படம் எதுனா ரிலீஸ் ஆனா, ஸ்பாய்லர் போடாதீங்க ஸ்பாய்லர் போடாதீங்கன்னு யாரு ஓவரா கூவிட்டு இருக்காங்களோ அவங்க தான் இருக்கற ஸ்பாய்லர் எல்லாத்தையும் தேடி தேடி கோட் பண்ணி அதிகமா ஸ்பாயில் பண்ணி வைச்சுருப்பாங்க..

வெண்பா

40-க்கு 40 வென்ற திமுகவினரால் ஒரு பயனுமில்லை” – தங்கர் பச்சான் விமர்சனம் #ஒரு ராஜ்யசபா உறுப்பினர் பெற்றவரால் என்ன பயன் என்பதைப் பற்றி மூன்று வரிகளுக்கு மிகாமல் சொல்லவும்

செங்காந்தள்

ஒரே பாட்டில் பணக்காரன் ஆவது இசை அமைப்பாளருக்குச் சாத்தியம்…!!!

கடைநிலை ஊழியன்

மக்கள் to ஜி – G7 மாநாடு ‘க்கு போனீங்களே.. அங்க என்ன பண்ணீங்க.. ?

ஜி – எல்லாரு கூடவும் போட்டோ எடுத்தேன்..

 

mohanram.ko

படம் காட்டுவதே வேலையா போச்சு, சினிமா தியேட்டர்களுக்கு…
பாக்ஸ் மேல ஒரே இடியாப்ப சிக்கலா இருக்கு… நல்ல கவர் ஒண்ணு கிடைக்கலையா தலைவரே ?
லாக் ஆஃப்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share