வீக் எண்ட் பாலிடிக்ஸ்… அப்டேட் குமாரு

Published On:

| By Selvam

இன்னைக்கு நண்பன் ஒருத்தர் கூட டீக்கடைக்கு போயிருந்தேன்.

“ஒருவழியா விஜய் வொர்க் ஃபிரம் ஹோம்ல இருந்து, வொர்க் ஃபிரம் ஃபீல்டுக்கு வந்துட்டாருன்னு” நண்பர் சொன்னாப்ல.

”அட… நீங்க வேற… சனி, ஞாயிறு இரண்டு நாள் ஷூட்டிங் லீவாம். அதான் நம்ம விஜய் வீக்கெண்டுல பூத் கமிட்டிக் கூட்டத்த நடத்தியிருக்காருன்னு” சொன்னேன்.

“ஆமால்ல… இதை நான் யோசிக்கவே இல்லையேன்னு” நண்பர் சொன்னாப்ல. Update kumaru memes jokes

நீங்க அப்டேட்ஸ் பாருங்க…

கடைநிலை ஊழியன்

எல்லாரும் CSK தோத்துருச்சு னு நினைச்சிட்டு இருக்காங்க..

ஆனா தல விட்டு குடுத்துட்டாருங்கிற உண்மை எனக்கு மட்டும் தான் தெரியும்..

Mannar & company™🕗

மும்பையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் தீ விபத்து. தீ விபத்துக்கான காரணம் என்னவென்று இன்னும் தெளிவான தகவல் இல்லை என மும்பை தீயணைப்புத் துறை தகவல்!

செய்தி படிக்கிற எங்களுக்கு தெரிஞ்ச காரணங்கள்கூட உங்களுக்கு தெரியலன்னு சொல்றீங்க பாருங்க.. அருமை சார்!!


குருநாதா

மாசக்கடைசியில்
காசு இல்லாமல்
மட்டன் கடைய கடக்கும் போது
பரவால்ல சார் சம்பளம் வந்ததும் குடுங்கனு சொல்ற கடைக்காரர் கடவுள் சார்

இரா. முருகவேள்

இன்று காலை உயிர்மைக்கு கட்டுரை எழுத உட்கார்ந்தேன். மனைவி வந்து இந்த மாதம் இன்னும் ரேஷன் கடைக்குப் போகவில்லை என்றார். இன்று ஞாயிற்றுக் கிழமை என்றேன். அதெல்லாம் ரேஷன் கடை இருக்கும் என்றார்.

சரி என்று பாய்ந்து ரேஷன் கடை சென்றேன். லீவு. என் தன்மான உணர்ச்சி கொந்தளித்தது பொங்கி வந்தது. உத்வேகம் அடைந்து அடுத்த தெருவில் இருக்கும் தமிழ்நாடு நுகர் பொருள் வாணிப கழக அலுவலகத்துக்கு சென்றேன்.

அங்கே வாட்ச்மேன் இருந்தார். அவரிடம் நான் ஒரு தமிழ் எழுத்தாளன். ஆளும் கட்சியை சேர்ந்தவர் எங்கள் உயிர்மை ஆசிரியர். எனவே உடனடியாக குடோனைத் திறந்து எனக்கு 5 கிலோ சக்கரையும், 1 கிலோ பருப்பும், பாம் ஆயிலும் தர வேண்டும் என்று கோரினேன்.

காவலாளி மறுத்தார். சட்டத்தை கையில் எடுத்துக் கொண்டு குடோன் மீது தாக்குதல் தொடுத்து நானே மேற்படி அயிட்டங்களை எடுத்துக் கொள்ளலாமா என்று யோசித்தேன். வேண்டாம் என்று முடிவு செய்து குளக்கரை ஓரம் உள்ள ஒரு காபி ஷாப்புக்கு சென்றேன்.

சுமாரான காபிக்கு பிறகு திரும்பி கொஞ்ச தூரம் வந்த பிறகுதான் தெரிந்தது ஒரு குளக்கரை ஓணான் என் ஸ்கூட்டர் ஹேண்டில் பார் மீது அமர்ந்திருந்து.

திருவாளர் ஓணான் என்மீது குதித்தல் நான் தடுமாறி சாலையில் விழ் நேரிடும். அவர் குதித்தால் வாகனங்கள் ஏறி சட்னி ஆகி விடுவார்.

சற்றே பொறும் அய்யா என்று வண்டியை மீண்டும் குளக்கரை நோக்கித் திருப்பினேன்.

ஓணான் அவர்களும் நானும் ஒருவரை ஒருவர் சந்தேகத்துடன் பார்த்துக் கொண்டே முக்கால் கிலோமீட்டர் பயணம் செய்தோம். அவரது இடம் வந்ததும் ஓணான் ஆனவர் என்னிடம் விடை பெற்றுக் கொண்டு குளக்கரை புதர்களுக்குள் சென்று விட்டார்.

திரும்பி வரும் போது இன்று வெயில் அதிகம் என்று தோன்றியது.

மயக்குநன்

எந்தப் பக்கம் பார்த்தாலும் நேர்மைக்கும், உண்மைக்கும் பஞ்சம்!- சீமான்.

ஆனா… நீங்க விடுற கதைக்கு மட்டும் பஞ்சமே இல்லை தலைவரே..!

Sasikumar J

~ துருவி துருவி விசாரிக்கிறதுல்ல கில்லாடி மாமா…

~ யாரு போலீசா… சிபிஐயா…

~ பொண்டாட்டி மாமா…

balebalu

உள் மாவட்டங்களில் வெப்பம் அதிகரிக்கும் – செய்தி

அப்ப வெளி மாவட்டங்களில் வெப்பம் குறையுமா

அதான் இல்ல
அது ஏற்கனவே நெருப்புல இருக்கு 😫


Mannar & company™🕗

மீன்களுக்கு மீன்பிடி தடைகாலம் இருக்கிற மாதிரி கோடைக்கால விடுமுறைக்கு அம்மா வீட்டிற்கு பிள்ளைகளுடன் மனைவி போறதும் அப்படித்தான் இருக்கிறது கணவன்களுக்கு!

லாக் ஆஃப்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share