மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் கூடுதலாக பெண்கள் சேர்க்கப்படுவார்கள் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார். magalir urimai thogai scheme
தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று (ஏப்ரல் 27) கோவை சென்றார். அங்கு, ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற விழாவில் 9.67 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சர்வதேச தரத்தில் செயற்கை புல்வெளி தளத்துடன் கூடிய ஹாக்கி மைதானம் அமைக்கும் பணி உட்பட 82.14 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 132 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். magalir urimai thogai scheme
29.99 கோடி ரூபாய் மதிப்பீட்டில் முடிவுற்ற 54 திட்டப்பணிகளை திறந்து வைத்து. 25,024 பயனாளிகளுக்கு 239.41 கோடி ரூபாய் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய உதயநிதி ஸ்டாலின், “இந்தியாவே திரும்பி பார்க்கக்கூடிய திட்டம் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம். ஒரு கோடியே 15 லட்சம் மகளிர் இத்திட்டத்தின் மூலம் பயனடைந்து வருகின்றனர். இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் நேற்று முன் தினம் சட்டப்பேரவையில் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதாவது கலைஞர் உரிமைத் தொகை யாருக்கெல்லாம் விடுபட்டு போயிருக்கிறதோ, அவர்கள் முறையாக விண்ணப்பித்தால், நிச்சயமாக விரைவில் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று கூறினார். இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் வரும் ஜூலை மாதம் முதல் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்தார்.
எனவே இன்னும் அதிகமான மகளிருக்கும் உரிமைத் தொகை கிடைக்கும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்” என்றார். magalir urimai thogai scheme
மேலும் அவர், எல்லோருக்கும் எல்லாமும் என்பதுதான் திராவிட மாடல் அரசு. அனைத்து தரப்பு மக்களும் பயனடையும் வகையில் திட்டங்களை முதலமைச்சர் நிறைவேற்றுகிறார். புதுமைப்பெண் திட்டம் மூலம் 3.5 லட்சம் மாணவிகளுக்கு மாதம்தோறும் 1000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்தியாவிற்கே முன்னோடியாக தமிழ்நாட்டின் வளர்ச்சி விகிதம் 9.6ஆக உள்ளது” எனவும் குறிப்பிட்டார். magalir urimai thogai scheme
