கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?
தீபாவளி நெருங்க நெருங்க, டிவி சேனல்களோட விளம்பர வெறி உக்கிரமா போயிட்டு இருக்கு.
அத பாத்துட்டு ‘ஏங்க அந்த கடைக்கு போலாம், இந்த கடைக்கு போலாம்’னு வீட்டுல பொண்டாட்டிக்கு வெறி ஏறுதே…
இந்த தீபாவளிக்கு தப்பி பொழச்சி வந்தா.. உனக்கு மூன்னு மொட்ட போடுறேன்பா… உன் புள்ளைய எப்படியாச்சு காப்பாத்திரு…

Mannar & company™🕗
தீபாவளிக்குன்னு ஒரு லேகியம் செஞ்சு கொடுப்பாங்களே..
அவங்க எல்லாம் எங்க போனாங்க…!
தீபாவளி_லேகியம்

கிரிகாலன்
எங்க போனாலும் எமர்ஜென்சி கான்டாக்ட்ல ஒரு ஆபிஸ் பிரண்டோட போன் நம்பர் தான் தந்துட்டு இருக்கேன்.
அவனோ தெரியாத நம்பர்ல இருந்து போன் வந்தா மதிக்க கூட மாட்டான்..

அன்வர்
“பெண்கள்கிட்ட ‘நல்லி’ன்னு சொன்னா புடவைக்கடையையும்,
ஆண்கள்கிட்ட ‘நல்லி’ன்னா கறிக்கடையையும் தான் சொல்லுவாங்க!”
தீபாவளி_பரிதாபங்கள்

ஜாபர்
என்று ஒரு பெண் தன்னந்தனியாக நெடுஞ்சாலையில் கழுத்து நிறைய நகைகளுடன் செல்கிறாளோ, அன்று அவள் கவரிங் நகை அணிந்திருப்பதாக அர்த்தம்.

கல்யாணம்
ரெஸ்டாரன்ட்டுகளில் மெனு கார்டை பார்த்து ஆர்டர் செய்யப்படும் உணவுகளை விட, அக்கம்பக்கத்து டேபிள்களை பார்த்து ஆர்டர் செய்யப்படும் உணவுகளே அதிகம்.

ச ப் பா ணி
பொய் சொன்னால் சாமி கண்ணை குத்துதோ இல்லையோ..
ஹெல்மெட் போடாம போனால்
பூச்சி வந்து கண்ணை குத்திடுது

லாவண்யா
தெரிந்த எண்ணிலிருந்து வரும் அழைப்புகள் கடன் கேட்டு வருபவை
தெரியாத எண்ணிலிருந்து வரும் அழைப்புகள் கடன் கொடுக்க வருபவை

லாக் ஆஃப்