கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?
கை தவறி ஒரு பொருளை கீழே போட்டு நீங்கள் உடைத்த போதும், உங்கள் மனைவி எதுவும் பேசாமல் உடைந்த பொருளை கூட்டி சுத்தம் செய்து குப்பைத்தொட்டியில் போட்டால், அதைவிட வேறு ஏதோ பெரிய பிரச்சனையில் உங்கள் மண்டை உடைபட போகிறது என்று அர்த்தம்.

Mannar & company™🕗
வடைக்குள் ஆயில் வைத்திருக்கும் கடவுள்தான்,
நடைக்குள் நம் ஆயுளை வைத்திருக்கிறான்!
வாக்கிங்_தத்துவம்

mohanram.ko
420 ரூபாய் விற்ற மைசூர் பாக்கு இன்று 360 ரூபாய்க்கு விற்கப்படுகிறது எல்லாரும் வாங்கி சாப்பிடுங்க….
நானே சுகர் பேஷண்ட்டுடா

ச ப் பா ணி
பெண்களின் உளவியல் பற்றி
நான் முப்பது வருடங்களாக ஆராய்ச்சி செய்த போதிலும்,
இன்னும் என்னால் பதிலளிக்க முடியாத பெரும் கேள்வி..
ஒரு பெண்ணுக்கு என்ன வேண்டும்?
என்பதுதான்.
-சிக்மண்ட் ப்ராய்ட்

Writer SJB✒️
கறிக்கடை மீன் கடையில் ஒரே கூட்டம் விலையும் குறையல அப்படி யார் தான் புரட்டாசி விரதம் இருக்கீங்க?

குருநாதா
என்னங்க உங்க வொய்ப் உங்கள நாய் மாதிரி நடத்துறாங்கனு சொன்னீங்க
பாத்தா ராஜா மாதிரி வாழ்றீங்க
என் வொய்ப் dog lover ங்க

களவாணி
கோபத்துல தான் டீ அழகா இருக்கனு சொன்னேன்
தக்காளி எப்பவுமே கோபத்துலயே இருக்கா

லாக் ஆஃப்