எலிமினேஷனுக்கு முன்பே… பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட நந்தினி : என்னாச்சு?

Published On:

| By christopher

nandhini eliminated from biggboss season 9

பிக்பாஸ் வீட்டில் இருந்து போட்டியாளர்களில் ஒருவரான நந்தினி வெளியேற்றப்பட்டுள்ளார்.

கடந்த 5 ஆம் தேதி முதல் நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் ’பிக்பாஸ் தமிழ் சீசன் 9’ நிகழ்ச்சி தனியார் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வருகிறது. மற்ற சீசன்களை போல் இல்லாமல், இந்த சீசனில் பங்கேற்றுள்ள போட்டியாளர்கள் முதல் வாரத்திலேயே அனைத்தையும் வெளிப்படையாக பேசி வருவது பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT

எனினும் போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்ற நந்தினி, பிக்பாஸ் வீட்டில் நடக்கும் நிகழ்வுகள் தனிப்பட்ட முறையில் தன்னை பாதிக்கிறது என்றும், இதனால் தான் இந்த இடத்தில் இருக்க விரும்பவில்லை எனவும் கூறியது பிக்பாஸ் டீமையை கலங்கடித்தது.

நேற்றைய நிகழ்ச்சியில் மற்ற போட்டியாளர்கள் குறித்த தனது கருத்துகளை ஆக்ரோசமாக பேசிய நந்தினி, என்னை புரிந்துகொள்ள யாருமே இல்லை எனக்கூறி கதறி அழுதார்.

ADVERTISEMENT

இந்த நிலையில் கன்ஃபசன் அறைக்கு அழைத்து விசாரித்த பிக்பாஸ், அவரை அங்கிருந்து நேரடியாக வெளியேற அனுமதித்தார். இதன்மூலம் சீசனில் இருந்து முதல் வார எலிமினேஷனுக்கு முன்பே நந்தினி வெளியேறியுள்ளார்.

இதற்கிடையே வெளியே செல்வதற்கு முன்பு நந்தினி தன்னைப் பற்றி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கூறிய வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ADVERTISEMENT

அதில், “2018 ஆம் ஆண்டு என் கண் முன்னாள் என் அம்மா இறந்தார். அப்போதும் யாரும் என் கூட நிக்கல. அவ்வளவு வலியிலும் வேதனையிலும் என் தம்பிக்காக மட்டும் தான் நான் வாழ்ந்தேன். ஒரு பெண்ணாக இருந்து இந்த சமுதாயத்தில் எல்லா பிரச்சனைகளையும் நான் சந்தித்திருக்கிறேன். ஒரு பாசத்திற்காக ஏங்கினாலும் எல்லாரும் ஏதோ ஒன்றை நம்மிடம் எதிர்பார்க்கிறார்கள். அந்த உண்மையான அன்பும் பாசமும் எங்கேயும் எனக்கு கிடைக்கல” என நந்தினி கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share