Mannar & company™🕗
அடுத்த இரண்டு நாளைக்கும் சைடிஷ்க்கு பிரச்சினை இல்லை தீபாவளிக்கு மீந்த பலகாரங்கள்தான் எல்லா சாப்பாட்டுக்கும் சைடிஷ்!


▶படிக்காதவன்™✍
தீபாவளிக்கு வாங்குன பட்டாசுல கொஞ்சம் மிச்சம் வச்சிருந்து கார்த்திகை தீபத்தன்னைக்கு வெடிக்கிறதுல இருக்கு. அதான் தீபாவளிக்கும் தீபத்துக்குமான நட்பு…

Mannar & company™🕗
மாடிப்படி ஏறி இறங்கினால் உடம்பு பலவீனமாக இருக்கா இல்லையான்னு தெரிஞ்சிடும்,
உறவினர்கள் வீட்டு வாசல்படி ஏறி இறங்கினால் உறவு பலமாக இருக்கா இல்லையான்னு தெரிஞ்சிடும்!

Sasikumar J
போன வருஷம் தீபாவளிக்கு வாங்குன டிரஸ் இந்த வருஷ தீபாவளிக்கு பத்தல, எப்படிடா உனக்கெல்லாம் தீபாவளி கொண்டாடறதுக்கு மனசு வருது…!

மஹான்
நாய் மைண்ட் வாய்ஸ்…
பட்டாசெல்லாம் வெடிச்சி முடித்ததும் கறியா மாறும்னு சொன்னாங்கா… அப்படி ஒன்னும் இல்லையே
வெயிட் பண்ணுவோம்..!

✒️Writer SJB✒️
நமக்கு வரும் பட்டாசு கிஃப்ட் பாக்ஸும் வாழ்க்கையும் ஒன்னு தான்
பிடித்த பட்டாசு கொஞ்சமாய் இருக்கும்
பிடிக்காதது நிறைய இருக்கும்
பார்க்க எல்லாமே கலர் கலரா இருக்கும்
வெடிச்ச பின்னாடி எல்லாமே கரியா மாறிடும்..!

✒️Writer SJB✒️
நீங்க எவ்வளவு பெரிய விஜய் ஃபேனா இருந்தாலும்
கல்யாணமான முதல் வருஷம் தல தீபாவளி தான் கொண்டாடியாகணும்..!

கனகா
தீபாவளி கொண்டாடிட்டு உடனே எப்படி வேலைக்கு வர முடியும்?
மிச்சம் இருக்கும் பலகாரங்களும் சாப்பிட்டு தான வர முடியும்?
இத நல்லா தெரிஞ்சு வச்சுக்கிட்டு அந்த வருணபகவானே வந்து லீவு கொடுத்தார் பாரு,
என்ன மனுஷன்யா..!
லாக் ஆஃப்
