ADVERTISEMENT

ஏதே 2 மணி நேரமா? டைம் இல்ல… டைம் இல்ல… அப்டேட் குமாரு

Published On:

| By christopher

update kumaru memes and trolls oct 14

balebalu

தீபாவளி காலை 6 மணி முதல் 7 மணி வரை மற்றும் இரவு 7 மணி முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி – தமிழக அரசு

அப்படியே நாள் பூரா வெடிக்க அனுமதி கொடுத்தாலும் அத்தனை பட்டாசு வாங்க கையில காசும் இல்ல பசங்களுக்கு ஆர்வமும் இல்ல. நீங்க நம்பலனாலும் அதான் நெசம்.

ADVERTISEMENT

Mannar & company™🕗

“ஹை.. தீபாவளி வருது
என்பதில் ஆரம்பித்து,
அய்யோ.. தீபாவளி வேற வருது
என்பதில் முடிகிறது ஆண்களின் வாழ்க்கை!” – தீபாவளி_பரிதாபங்கள்

ArulrajArun

“ஸ்டிராங்கான ஆளுக வரப்போறாங்க…” – வானதி சீனிவாசன்

ADVERTISEMENT

மக்கள் ~ இவ்ளோ நாளு அடுத்த கட்சியில் இருந்து ஆள இழுத்துட்டு இருந்தானுங்க… இப்போ அடுத்த கட்சியில இருக்கிற bouncer-ஐ இழுப்பானுங்க போல…

Sasikumar J

~ தீபாவளிக்கு அவங்க வீட்ல பலகாரம் செஞ்சு முடிச்சிட்டா பக்கத்து வீட்ல வந்து முறுக்கு பிழிந்து கொடுக்கவா அப்படின்னு கேட்பாங்க…!

ADVERTISEMENT

~ டேய் இப்பல்லாம் அவங்க வீட்டுலயே முறுக்கு கூட செய்யுறது இல்லாடா…!!

ArulrajArun

கடன் வாங்குகிற வரைக்கும் கவர்மெண்ட் வேலைக்கு அப்ளை பண்ணி வாங்குற மாதிரி கடன் வாங்குறாங்க
கடனை கேட்டா மட்டும் காபி குடிச்ச டம்ளரை கழுவி ஊத்துற மாதிரி நடந்துக்கிறாங்க …

ArulrajArun

மனுசன் வாழ்க்கையில சாதி மதம் “மண்ணாங்கட்டி எல்லாம்” கிடையாது

இட்லி சட்னி சாம்பார் மட்டும் தான்

ஏன் காலையில இட்லி கடைக்கு ஏதும் போய்ட்டு வந்தியா

ஆமா அதுக்கு என்ன இப்போ..‌

ArulrajArun

தீபாவளி நேரத்துல பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களில் விழிப்புணர்வு ஆடியோ போடுவாங்க பாருங்க சாதாரணமாக நடந்துப்போனா வராதா பயம் அந்த விழிப்புணர்வு ஆடியோ கேட்டுட்டு நடக்கும் போது நம்ம கூட வந்தவர்கள் மேலே சந்தேகம் வந்திடும் போல ….

ArulrajArun

“ஒரு கப் டீயை விட 1 ஜிபி டேட்டா விலை குறைவு” – பிரதமர் மோடி பெருமிதம்

இந்த ஏர்டெல்காரனும், ஜியோ காரனும் 1 ஜிபி டேட்டா மன்த்லி ஆஃபரையே தூக்கிட்டாங்கனு அவருக்கு தெரியுமா?

ArulrajArun

என்ன நோக்கதுல இந்த போனஸ் கண்டுபிடிச்சாங்களோ தெரியல,
போனஸ் வாங்குறதும் தெரியல செலவு பண்றதும் தெரியல

போனஸ்_பரிதாபங்கள்

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?

ஷோரூம்ல விலை அதிகமான ஒரு டிரஸை பார்த்த உடனே என்ன விலை இருக்கும்னு கரெக்டா ஜட்ஜ் பண்ணிட்டா, நீ சாமர்த்தியசாலின்னு அர்த்தம் கிடையாது..

இத்தனை வருசமா கடைக்காரனுக எல்லாம் சேர்ந்து உன் மண்டையை அந்த அளவு கழுவி வைச்சுருக்கானுகன்னு அர்த்தம்..

லாக் ஆஃப்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share