ADVERTISEMENT

பிரதீப், துருவ்- உடன் தீபாவளி ரேஸில் மோதுவது ஏன்? – மேடையில் போட்டுடைத்த ஹரிஷ் கல்யாண்

Published On:

| By christopher

why diesel release with dude and bison for diwali

தீபாவளி என்றாலே புத்தாடை, பட்டாசு, பலகாரம் போன்றவை எப்படி நம் நினைவுக்கு வருமோ, அதேபோன்று தீபாவளிக்கு ரிலீசாகும் புதுப்படங்களையும் யாராலும் பிரிக்க முடியாது.

தமிழ் திரையுலகை பொறுத்தவரை ஒவ்வொரு தீபாவளிக்கும் உச்சநடிகர்களான ரஜினி, கமல், விஜய், அஜித் ஆகியோரின் ஏதாவது ஒரு படங்கள் நிச்சயம் ரிலீசாகும்.

ADVERTISEMENT

ஆனால் இந்தாண்டு அவர்களுக்கு பதிலாக வளர்ந்து வரும் இளம் நடிகர்களான ஹரிஷ் கல்யாணின் ’டீசல்’, பிரதீப் ரங்கநாதனின் ’டியூட்’, துருவ் விக்ரமின் ’பைசன்’ ஆகியோரது படங்கள் தீபாவளி ரேஸில் போட்டியிடுகின்றன. இதுதவிர நட்டி நட்ராஜின் கம்பி கட்ன கதை, சமுத்திரகனியின் கார்மேனி செல்வன் ஆகிய படங்களும் வரும் 17ஆம் தேதி ரிலீசாக உள்ளன.

இந்த நிலையில் ஹரிஷ் கல்யாணின் ’டீசல்’ திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு நிகழ்ச்சி சென்னையில் இன்று (அக்டோபர் 14) நடைபெற்றது. அதில் அதுல்யா ரவி, தீனா, தங்கதுரை, இயக்குநர் சண்முகம் முத்துசாமி உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டனர்.

ADVERTISEMENT

முயற்சி தோற்காது!

நிகழ்ச்சியில் ஹரிஷ் கல்யாண் பேசுகையில், “தீபாவளி ரேஸ்ல ‘டீசல்’ வர்றதுக்குக் காரணம் என்னனு எல்லோரும் கேக்குறாங்க. பெரிய பட்ஜெட், நீண்ட விடுமுறை என எல்லாப் படத்துக்கும் ஒரு டெஸ்டினி இருக்கும். அந்தந்தப் படம், அந்தந்த டெஸ்டினியைத் தேடி, அதுவே ஒரு இடத்துக்கு வந்து நிற்கும்னு சொல்லுவாங்க. எப்படி இந்தப் படம் ஒரு பட்ஜெட்ல ஆரம்பிச்சு ஒரு பட்ஜெட்டுக்கு வந்ததோ, இந்தப் படத்துக்குள்ள எப்படி மற்ற நிறைய விஷயங்கள் உள்ள வந்ததோ அந்த மாதிரிதான்.

என்னை போட்டியாக நினைத்தால் போட்டி, அப்படி இல்லைன்னு நினைத்தாலும் பிரச்சனை இல்லை. வரும் 17-ஆம் தேதி படம் ரிலீஸ் ஆகுது. ரசிகர்கள் கண்டிப்பாக ஆதரவு தருவாங்க என நான் நம்புகிறேன். எனக்கு எப்பவுமே உங்களுடைய அன்பும், ஆதரவும் இருந்திருக்கு. அது தொடர்ந்து இருக்கும்.

ADVERTISEMENT

ரொம்ப கவனமாக நல்ல படங்கள், நல்ல கதாபாத்திரங்கள் தேர்வு செய்து நடிக்கனும் என்பது தான் என்னுடைய ஆசை. கண்டிப்பாக அதுக்கான இயக்குநர்களும், தயாரிப்பாளர்களும் வருவார்கள்.

ஒரே ஒரு விஷயம்தான், முயற்சி! எடுக்கிற முயற்சிகள் சில நேரம் தோத்திருக்கலாம், சில நேரம் பெருசா ஜெயிச்சிருக்கலாம். ஆனா, அந்த முயற்சி எடுத்தவன் எப்பவுமே அடுத்தடுத்த கட்டத்துக்குப் போவான் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் கிடையாது.

அதுல்யாவுக்கு பாராட்டு!

அதுல்யா பத்தி சொல்ல மறந்துவிட்டேன். படத்துக்காக ரொம்ப கஷ்டப்பட்டாங்க. கடலுக்குள்ள எல்லாம் ஷூட்டிங் பண்ணும்போது, காலையில ஒரு 7-8 மணிக்கு போனோம்னா, திருப்பி கரைக்கு வர ஒரு 3-4 மணி வரைக்கும் ஆகும். அந்த மாதிரி நேரத்துல ரொம்பக் கஷ்டமாக இருக்கும். பசங்க நாம அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம், பட் அவங்களுக்கு ரொம்பக் கஷ்டமாக இருக்கும். அந்த மாதிரிப் பல விஷயங்களை அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டு, ரொம்ப சப்போர்ட்டிவா இருந்து நடிச்சி கொடுத்தாங்க.

அயராத உழைப்புக்கு நிச்சயம் பாராட்டு வரும்!

நான் கொஞ்சம் டென்ஷனாவே இருப்பேன். ஆனால் கூட இருக்கிற தீனா, தங்கதுரை கொஞ்சம் ஜோக் அடிச்சிட்டு ஜாலியா கலாய்ச்சிட்டு இருப்பாங்க. அப்பதான் கொஞ்சம் மூடே மாறும்.

இயக்குநர் என்னை விட அதிகமாகவே பரபரப்பாக இருப்பார். அவரைப் பத்தி குறை சொல்லவில்லை. டயலாக் ஷீட் எனக்கு ஒரு நாள் முன்னாடி குடுப்பாங்க, ஆனா அடுத்த நாள் வந்து பார்த்தா காலையில உட்கார்ந்து எழுதிட்டு இருப்பார். ஏற்கெனவே இருந்த சீனை அடிச்சிட்டு ஃபிரெஷ்ஷா எழுதுவார். கடைசி நிமிடம் வரைக்கும் அவருடைய ஒர்க், டயலாக்கா இருக்கட்டும், சீன் கன்ஸ்யூவ் பண்ற விதமா இருக்கட்டும், அத ஸ்டேஜ் பண்ற விதமா இருக்கட்டும், அது இருந்துகிட்டே இருக்கும். அந்த அயராத உழைப்புக்கு கண்டிப்பாக பாராட்டு வந்து சேரும்னு நான் நம்புறேன்” என ஹரிஷ் கல்யாண் பேசினார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share