இன்னைக்கு டீக்கடைக்கு போயிருந்தேன். அங்க ஒருத்தரு ‘இந்த புதிய கல்வி கொள்கைப்படி மூணாவது, அஞ்சாவது படிக்குற பிள்ளைங்க கம்மியா மார்க் எடுத்த பெயில் ஆக்கிருவோம்னு
விதி கொண்டு வந்துருக்காங்க’னு சொல்லி வருத்தப்பட்டாரு.
அத கேட்டதும், “ஆமா இவனுங்க படிக்குற பிள்ளைங்கல படிக்க விடாம ஆக்க இப்படி செய்வாங்க.. ஆனா தேர்தல்ல போட்டியே போடாமா டைரக்டா மத்திய அமைச்சர் பதவி கொடுப்பானுங்க”னு டீய ஆத்திக்கிட்டே கழுவி ஊத்துறாரு..
’பேசாம எலெக்சன்ல நிக்கறவங்களுக்கும் கட்டாய தகுதித் தேர்வு வைக்கனும்’னு தன்னோட பங்குக்கு ஒரு கருத்து சொல்லிட்டு போனாரு ஒரு தாத்தா.. update kumaru memes and trolls may 3
நீங்க அப்டேட்ஸ் பாருங்க… update kumaru memes and trolls may 3

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?
NDA கூட்டணியல் TVK இணைவது குறித்து ஒரு வருடத்தில் முடிவெடுக்கப்படும் – பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்.
விஜய்னா : யோவ் யாரை கேட்டுய்யா என் கட்சி பத்தி நீ முடிவெடுக்கற?
நயினா ~ கசாப்பு கடைல எல்லாம் ஆட்டை கேட்டுட்டா வெட்றாங்க..? குனிய வைச்சு ‘கப்’ன்னு வெட்றதில்ல, அது மாதிரி தான்.

🔥 DESPOTER 🔥
சி.எஸ்.கே. டீம் டூ ஆர்.சி.பி. ~ எங்களுக்கு எல்லாம் 170 போதும்டா…. 220 தாண்டி போறீங்க…
பூப்பறிக்க கோடாலி எதுக்குடா….

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?
புதிதாக பழக ஆரம்பிக்கும் பெண்ணிடம் நட்பாகிக் கொள்ள எளிய வழி.
இருவருக்கும் தெரிந்த வேறு ஒரு பொதுவான பெண்ணை பற்றி எதாவது குறை சொல்லி சலித்து கொள்ளுங்கள், போதும்.

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?
உலகத்துலயே போடற உழைப்புக்கு மேல பலன் கிடைக்கறது கார் ஓட்றதுல தான்.
காசு பத்தி சொல்லல.. இப்ப வர்ற கார்கள்ல கியர் மாத்ற வேலை கூட கிடையாது. சொகுசா பாட்டு கேட்டுட்டே எவ்வளவு ஈசியா கொண்டு சேர்த்துருது..

vadivel
me ~ பேசாம software engineer ஆகிருக்கலாம்.. onsite போயி நல்லா சம்பாதிச்சுருக்கலாம்..
Daddy ~ இத தான அப்போ சொன்னோம்… மாடு மேய்ச்சா பெரிய ஆளாயிராம்னு எவனோ ஒருத்தன் சொன்னத கேட்டு திரிஞ்ச…

Suyanalavaathi
tea lover னா என்னனு தெரியுமா.. ?
வெயில் காலத்துல கூட பட்ட பகல் 12 மணிக்கு சூடா டீ குடிக்குறது..

Sasikumar J
நமக்கு நல்லது செய்யவும் ஆளில்லை, நல்லது நடக்க நினைக்கவும் ஆள் இல்லை
ஆகவே நாம் தான் நினைத்து அதை செய்து கொள்ள வேண்டும்…!

பழனிவேல்
சைலன்ஸரில் சுட்டுகிட்டா கூட தெரிய மாட்டேங்குது,
வெயில் தான் அப்படி அடிக்குதோ அப்படின்னு நினைக்கிற மாதிரி இருக்கு…!

✒️Writer SJB✒️
நான் அவசரமா வீட்டுக்கு போகணும் நான் போகலேன்னா என் பொண்டாட்டி சாப்பிடவே மாட்டா
ஓ உங்க மேல அவ்வளவு லவ்வா?
மண்ணாங்கட்டி நான் போய் தான் சமைக்கணும்..!