மாமல்லபுரத்தை அடுத்த கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள திருவிடந்தை பகுதியில் வன்னியர் சங்கம் சார்பில் சித்திரை முழு நிலவு வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு மே 11-ஆம் தேதி நடைபெற உள்ளது. Anbumani advised pmk cadres
அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தங்கள் பலத்தை நிரூபிக்கும் வகையில் லட்சக்கணக்கில் வன்னியர் சமூகத்தினரை கூட்டும் வகையில் இந்த மாநாட்டுக்கான ஏற்பாடுகளை பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ஆகியோர் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தநிலையில், இன்று (மே 3) சென்னை பனையூரில் உள்ள அன்புமணி அலுவலகத்தில் சித்திரை முழு நிலவு மாநாட்டில் கலந்துகொள்வதற்காக பாமக ஒன்றிய, நகர, மாவட்ட நிர்வாகிகளுக்கு வாகனங்கள் மற்றும் தனி நபருக்கான பாஸ் வழங்கப்பட்டு வருகிறது.
இதுதொடர்பாக பாமக முக்கிய நிர்வாகிகளிடம் நாம் பேசியபோது, “ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தனித்தனி கலர்களில் பாஸ் வழங்கப்பட்டு வருகிறது. கடலூர், சிதம்பரம், புவனகிரி, பண்ருட்டி தவிர்த்து மற்ற மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் புதுச்சேரி வழியாக மாநாட்டுக்கு வரக்கூடாது. அனைவரும் பைபாஸ் வழியாகவே வரவேண்டும்.
யாரும் மது அருந்திவிட்டோ, மதுபானம் வாங்கி வைத்துக்கொண்டோ மாநாட்டுக்கு வரக்கூடாது. வரும் வழியில் எந்தவிதமான பிரச்சனையும் செய்யக்கூடாது. இரண்டு வேளைக்கான சாப்பாட்டை பொட்டலம் கட்டிக்கொண்டும், தண்ணீர் பாட்டில்களை எடுத்தும் வர வேண்டும். எந்தவிதமான சிறு சலசலப்பும் இல்லாமல் மாநாட்டை சுமூகமாக நடத்த ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று நிர்வாகிகளுக்கு அன்புமணி அறிவுறுத்தியுள்ளார்” என்கிறார்கள்.Anbumani advised pmk cadres