’மார்க் கம்மியா எடுத்தா பெயிலா?’ – அப்டேட் குமாரு

Published On:

| By christopher

update kumaru memes and trolls may 2

இன்னைக்கு டீக்கடைக்கு போயிருந்தேன். அங்க இந்த சிபிஎஸ்இ பத்தி பேசிட்டு இருந்தாங்க.

ஒருத்தரு, மாப்ள கேள்விபட்டியா? ”புதிய தேசிய கல்விக்கொள்கையின் படி, சிபிஎஸ்இ பள்ளிகளில் கம்மியா மார்க் வாங்குனா 3, 5 மற்றும் 8ம் வகுப்பில் தேர்ச்சி பெற முடியாதுனு மத்திய அரசு அறிவிச்சிருக்கு’னு சொன்னாரு.

அத கேட்டுட்டு இருந்த அவரு நண்பரு, “எப்படி இவனுங்க, பசங்க ஸ்கூல் பக்கமே தலவச்சி படுக்க கூடாதுனு நினைக்குறானுங்களோ?”னு திருப்பி கேட்டாரு…

அடுத்த வருஷம் பையன கண்டிப்பா சிபிஎஸ்இல சேக்கனும்னு வீட்டம்மா சொல்லிட்டு இருந்தா, இத பத்தி அவகிட்ட பேசுவோம்னு அங்க இருந்து கெளம்பிட்டேன். update kumaru memes and trolls may 2

நீங்க அப்டேட்ஸ் பாருங்க… update kumaru memes and trolls may 2

கிச்சா

உழைப்பவன் வியர்வை காயும் முன் அவனின் சம்பளம் கொடுத்துவிடு – பழசு

உழைப்பவன் வியர்வை காயும் முன் அவனின் EMI யை எடுத்துவிடு – புதுசு

வருணன்

தங்கம் சவரனுக்கு ரூ.1640 குறைந்தது.

சந்துல யாரோ நேத்து தங்கத்துல இன்வெஸ்ட் பண்ணிருக்கீங்க.. ரெண்டு நிமிசம் லைட்டை ஆஃப் பண்ணி போடறேன், அந்த கேப்ல தங்கத்தை வித்துட்டு வந்துருங்க.. மார்க்கெட் பொழைச்சு போகட்டும்..

▶படிக்காதவன்™✍

கை இரும்பு மாதிரி வச்சிருந்தாலும்

விரல் வளைந்து கொடுத்தால் மட்டும்தான் சாப்பிட முடியும்…

ச ப் பா ணி

டீசல் விற்றாலுமே அது பெட்ரோல் பங்க் தான்

Joe…😎😎

செல்போன், கணினி மூலம் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்யும் பயணிகளிடம், போன் மூலம் குறுக்கு விசாரணை செய்யப்படும் ~ மத்திய அரசு

டிக்கெட்டே எடுக்காம AC கோச்ல, ஸ்லீப்பர்ல ன்னு வர்றானுங்க.. அவங்கள முறைப்படி விசாரிச்சு தண்டனை குடுக்க துப்பு இல்லை,

டிக்கெட் எடுக்குறவனை குறுக்கு விசாரணை பண்ணப்போறாங்களாம்.

ArulrajArun

கல்யாணம் ஆகி கஷ்ட பட போறத தான்,

கல்யாணம் எப்போ கல்யாணம் எப்போ கேட்டு கேட்டே கஷ்டப்பட வச்சுட்டு இருக்காங்க…

✒️Writer SJB✒️

எப்படி நீங்க திடீர்னு இவ்வளவு பெரிய பணக்காரரா ஆனீங்க?

ஏமாற்றி பணம் சம்பாதிப்பது எப்படி எனும் புத்தகம் வேண்டுவோர் இந்த முகவரிக்கு 300 ரூபாய் பணம் அனுப்பவும் அப்படின்னு விளம்பரம் பண்ணேன் ஒரு லட்சம் பேர் பணம் அனுப்புனாங்க ஆனா பாருங்க என்கிட்ட அந்த மாதிரி புத்தகமே இல்லை..!

கார்த்தி

டாக்டர்:- ஆப்ரேஷன் முடிந்ததும் நீங்க நடந்தே வீட்டுக்கு போகலாம்

பேஷண்ட் :-ஆட்டோ வாடகை பணத்தை கூட விட்டு வைக்க மாட்டீங்களா டாக்டர்..?

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?

மீ ~ வாழ்க்கைல ஒரு கட்டத்துக்கு அப்புறம் தாடி வைச்சா தான் நம்ம மூஞ்சில ஒரு மெச்சூரிட்டி தெரிது, நமக்கே நம்ம மேல ஒரு மரியாதையும் வருது.

பார்ட்னர் ~ அதெல்லாம் ஒன்னுமில்ல… வயசாகுது போய் பொழப்ப பாரு.

லாக் ஆஃப்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share