இன்னைக்கு அன்னையர் தினம்.. ரொம்ப சந்தோசமா இருந்துச்சு. அதனால காலைல எந்திச்சி ‘காலையில் தினமும் கண்விழித்தால் நான் கைதொழும் தேவதை அம்மா’… ’தாயில்லாமல் நானில்லை’ இப்படி பாட்டு போட்டுகிட்டு இருந்தேன்.
இத பாத்துட்டு அங்க வந்த எங்க அம்மா, ‘நீ பழனிக்கே பால்காவடி எடுத்தாலும், பிரியாணி கெடையாது’னு சொல்லிட்டு போயிட்டாங்க…
என்னடா இது அன்னையர் தினத்துக்கு வந்த சோதனைனு நெனச்சிட்டு,, அப்படியே பெரியம்மா வீட்டுக்கு வண்டிய விட்டுட்டேன். update kumaru memes and trolls may 11
நீங்க அப்டேட்ஸ் பாருங்க! update kumaru memes and trolls may 11

Crimenews
·குடிகாரர்களுக்கு தற்போது மாற்று பெயர் மதுபிரியர்களாம்
அதேபோல்,
சாதாரணமாக குடிப்பவர் – மதுவன்பர்
குடித்துவிட்டு தகறாறு செய்பவர் – மதுவம்பர்
குடித்துவிட்டு மாடியிலிருந்து குதிப்பவர் – மதுஜம்பர்
குடித்ததும் கவிதை கூற ஆரம்பிப்பவர் – மதுகம்பர்
எவருக்குந் தெரியாமல் மறைந்திருந்து குடிப்பவர் -மதுபங்க்கர்
வாயோரம் ஒழுகவிட்டு குடிப்பவர்..- மது சிந்தர்
உடன் குடிப்போருக்கு மருந்து சொல்பவர் – மது சித்தர்
குடித்தால் மட்டும் பாடுபவர்..- மது சிங்கர்
துணைக்கு ஆட்கள கூட்டுச் சேர்த்து குடிப்பவர் – மது சங்கர்
இனி குடிக்கமாட்டேன் என சபதம் எடுப்பவர் – மதுநோன்பர்
வேடிக்கை பார்த்து உள்ளே வெம்புபவர் – மதுவெம்பர்
எத்தனை ரவுண்டு குடித்தாலும் ஸ்டெடியாக நிற்பவர் – மதுதெம்பர்
மனைவி ஊருக்கு செல்லும்போது மட்டும் மது அருந்துபவர் – மதுபம்பர்
குடித்துவிட்டு தர்மம் செய்பவர் – மதுதர்மர்.

சரவணன். 𝓜
எனக்கு தெரிஞ்சு இந்தியா பாகிஸ்தான் போர் நிறுத்தத்தினால் ரொம்ப சந்தோஷமானது பிசிசிஐ தான்னு நினைக்கறேன்..
தட் லட்ச ரூபா கான்ட்ராக்ட்டுடா, அதுல மண்ணள்ளி போட்டுட்டாதீங்கடா மொமன்ட்..

▶படிக்காதவன்™✍
கொஞ்சம் கோபப்பட்டு கடவுளை திட்டிட்டாலும்
என்ன குமுதா பேச்செல்லாம் ஒரு திணுசா இருக்கு’ங்கிற மாதிரிதான் நினைச்சி கடவுள்
டீல் பண்ணுவாரு போல…

Mannar & company™🕗
பார்டர்ல பிரச்சினைனு பொண்டாட்டி ஊருக்கு போயிருக்காங்க!
எல்லைக்கா.. போர்தான் முடிஞ்சிருச்சே.
அட நீங்க வேற நேத்து எடுத்துட்டு வந்த பட்டுப்புடவைல பார்டர் பிடிக்கலையாம் அதை மாத்த போயிருக்காங்க!

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?
எப்ப நீ மனசு விட்டு வெளிப்படையா பேச ஆரம்பிக்கிறயோ..
அப்பதான் மனசுல உள்ள பாரம் எல்லாம் குறையுமா..?
அதான் கிடையாது, உன் மனசுல உள்ள அழுக்கு எல்லாம் மத்தவங்களுக்கு தெரிஞ்சுரும்.. அதனால எப்பவும் போல பொத்துனாப்ல இருன்னு சொல்ல வந்தேன்..

கடைநிலை ஊழியன்
பணம் சம்பாதிக்க மட்டும் கத்துக்கோங்க. உங்கள பார்த்து முகத்த திருப்பிட்டு போனவங்களையும், திரும்பி பார்த்து சிரிக்க வைத்துவிடும் அந்த பணம் !!

சரவணன். 𝓜
இன்னும் பத்து நாட்களில் பாகிஸ்தான் என்ற நாடே இருக்காது – அண்ணாமலை
வழக்கம் போல எழுதி வச்சுக்கணும், அதானே?

✒️Writer SJB✒️
தெய்வமே இந்து முஸ்லீம் காஷ்மீர் பிரச்சனை வச்சு தான் நான் அரசியல் பண்ணிட்டு இருக்கேன் நீ வந்து சமாதானம் பேசி என் பொழப்புல மண்ணள்ளி போட்டுடாத என் தெய்வமே
சங்கீஸ்:- அங்க பாருடா காஷ்மீர் பிரச்சனைல சமாதானம் பேச தயார்னு சொன்ன ட்ரம்பை ஜி சொடக்கு போட்டு மிரட்டுறார்!
லாக் ஆஃப்