இன்னைக்கு குடும்பத்தோட வெளிய போகலாம்னு இருந்தோம். அந்த நேரம் பாத்து ஒரே மழை… அப்பாட தப்பிச்சாச்சிடா சாமினு நெனச்சேன்.
ஆனா அப்போ ஒரு ட்விஸ்ட்… ”எங்க இந்த மழைத்தண்ணிய பாத்ததும் ஞாபகம் வந்துடுச்சி… நமக்கு கல்யாணம் ஆன புதுசுல நான் தண்ணில கால் வைக்காம இருக்க என்ன தூக்கிட்டு போனீங்களே… அது மாதிரி இப்ப தூக்குங்க”னு வீட்டம்மா கேட்டிச்சி…
அப்படியே ஷாக் ஆயிட்டேன். “அடியே அப்போ நீ 37 கிலோ இருந்த.. இப்போ 74 கிலோ இருக்க… நா அப்போ 64 கிலோ இருந்தேன். இப்போ 43 கிலோ இருக்கேன். வேணாமடி இந்த விபரீதம்’னு சொல்லிட்டு நைசா எஸ்கேப் ஆயிட்டேன். update kumaru memes and trolls june 11
நீங்க அப்டேட்ஸ் பாருங்க… update kumaru memes and trolls june 11

கோவிந்தராஜ்
TV-யில் Channel மாத்தாம ஒரே Channel-ஐ ரொம்ப நேரம் பார்த்துட்டிருந்தா, ஒண்ணு Remote சரியில்லாம இருக்கணும்…
இல்லை மனசு சரியில்லாம இருக்கணும்.
அதுவும் இல்லன அந்த டிவிய குழந்தைங்க பார்த்துக்கிட்டு இருக்காங்க ன்னு அர்த்தம்

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?
“பிள்ளைகளை தேனிலவுக்கு இவ்வளவு தூரம் அனுப்ப வேண்டும்தானா என பெற்றோர் யோசிக்க வேண்டும்” -ம.பி. முதலமைச்சர் மோகன் யாதவ்
அட்லீஸ்ட் பெத்தவங்க துணை இல்லாம பிள்ளைகளை தனியா அனுப்பனுமான்னாவது யோசிங்கடா அப்ரசன்டுகளா..

Greesedabba2
மல்லிகைப்பூ போல இட்லி சாப்பிட்டவன், Lavender Latte குடிக்க ஆரம்பித்தால், அவன் ஒரு பாரின் ரேஞ்சுக்கு வந்துவிட்டதாக அர்த்தம்.

▶படிக்காதவன்™✍
பக்குவம் பத்தி ஏதாவது எழுதலாம்னு நினைச்சேன்
சரி இதுக்கு முன்னாடி எழுதுனத படிக்கலாம்னு போய் பார்த்தேன்
இனி எதுவும் எழுதாமல் இருக்குறதுதான் பக்குவம்னு உணர்ந்துகிட்டேன்…

💙முகவரி🎙முத்து💙
நம்மளோட மொத்த வாழ்க்கையுமே…ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு version ல..ஓடிக்கிட்டு இருக்கு.!
இதுல ‘முத்தமழையில..சின்மயி version best..ஆ.? “தீ” version best..ஆன்னு பட்டிமன்றம் நடத்திக்கிட்டு இருக்கானுங்க.! Funny guys 😏.!!!

வர்ஷா ⛈️
நேர்மையா நடப்பவர்களை boomer/boring என்றும்…
குறுக்கு வழியில் போறவர்களை புத்திசாலி என்றும் அழைக்கும் காலத்தில் தான் நாம் தற்போது இருக்கிறோம்… 😔

தீபக் தாமஸ்
‘கால்கள் தாங்கித் தாங்கி நடப்பார். கண் பார்வை குறைவு. மனநிலை சற்று சரியில்லாதவர்’ என காணாமல்போன தாத்தாவைக் கண்டுபிடிக்க ஏதுவாய் தொலைக்காட்சியில் அடையாளம் சொன்னார்கள்.
இந்த அடையாளங்களுக்காகத்தான் அந்தத் தாத்தா தொலைந்தார் என்பது யாருக்காவது தெரியுமா?

✒️Writer SJB✒️
வெல்டிங்க்கும் வெட்டிங்க்கும் என்ன வித்தியாசம்?
வெல்டிங்கில் முதலில் பொறி பறக்கும் பிறகு இணையும்
வெட்டிங்கில் முதலில் இணையும் பிறகு பொறி பறக்கும்..!
லாக் ஆஃப்