WTC FINAL : வேகப்பந்துவீச்சில் சுருண்ட ஆஸ்திரேலியா… ஜாம்பவான்களுடன் இணைந்த ரபாடா

Published On:

| By christopher

sa rabada gets fifer and trash aus in wtc final

தென்னாப்பிரிக்கா அணியின் வேகப்பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் ஆஸ்திரேலியா அணி 212 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. குறிப்பாக கடைசி 5 விக்கெட்டுளை வெறும் 5.4 ஓவர்களில் இழந்தது. sa rabada gets fifer and trash aus in wtc final

லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் ஆஸ்திரேலியா – தென்னாப்பிரிக்கா அணிகள் இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஸ்ஷிப் இறுதிப்போட்டி இன்று (ஜூன் 11) மதியம் தொடங்கியது.

ADVERTISEMENT

இந்த போட்டியில் டாஸ் வென்று தென்னாப்பிரிக்கா பவுலிங் தேர்வு செய்த நிலையில், ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்தது.

ரபாடா மற்றும் ஜேன்சன் பந்துவீச்சில் முன்னணி வீரர்களான கவாஜா (0), லபுசனே (17), க்ரீன் (4), ஹெட் (11) ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். 67 ரன்களுக்கு 4 விக்கெட்டுகள் இழந்த நிலையில், 5வது விக்கெட்டுக்கு இணைந்த ஸ்மித் – வெப்ஸ்டர் ஜோடி நிதானமாக ஆடி 79 ரன்கள் குவித்தது. இந்த கூட்டணிய பகுதி நேர பவுலரான மார்க்ரம் பிரித்தார். அவரது பந்துவீச்சில் ஸ்மித் 66 ரன்களில் ஆட்டமிழந்தார்.

ADVERTISEMENT

அதன்பின்னர் வெறும் 5.4 ஓவர்களே வீசப்பட்ட நிலையில், அலெக்ஸ் கேரி (23), கம்மின்ஸ் (1), வெப்ஸ்டர் (72), லியான் (0) மற்றும் ஸ்டார்க் (1) ஆகியோர் அடுத்தடுத்து சரிந்தனர். இதனால் ஆஸ்திரேலியா அணி 212 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

ADVERTISEMENT

தென்னாப்பிரிக்கா அணி தரப்பில் ரபாடா 5 விக்கெட்டுகளையும், ஜேன்சன் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இந்த போட்டியின் மூலம் ரபாடா சர்வதேச டெஸ்ட் போட்டியில் 17வது முறையாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். மேலும் லார்ட்ஸ் மைதானத்தில் அதிக முறை (2) ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்திய மூன்றாவது தென்னாப்பிரிக்கா வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.

அவருக்கு முன்னதாக முன்னாள் வீரர்களான ஆலன் டொனால்ட் மற்றும் நிட்டினி ஆகியோர் லார்ட்ஸ் மைதானத்தில் 2 முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர்.

மேலும் தென்னாப்பிரிக்கா அணிக்காக டெஸ்ட் போட்டியில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் ஆலன் டொனால்டை (330) ரபாடா (332*) முந்தியுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share