”பரியேறும் பெருமாள் கதையின் முதல் ஹீரோ அதர்வா தான்” – மாரி செல்வராஜ்

Published On:

| By christopher

atharva is the first hero of pariyerum perumal - mari selvaraj

அதர்வா, நிமிஷா விஜயன் நடிப்பில் உருவாகியுள்ள ‘DNA’ திரைப்படம் வரும் 20ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தை ஒருநாள் கூத்து, மான்ஸ்டர், பர்ஹானா ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் இயக்கியிருக்கிறார். atharva is the first hero of pariyerum perumal – mari selvaraj

இந்தப் படத்திற்கு ஸ்ரீகாந்த் ஹரிஹரன் , சத்ய பிரகாஷ் , அனல் ஆகாஷ் , பிரவீன் சைவி , சாஹி சிவா என ஐந்து இசையமைப்பாளர்கள் இணைந்து இசையமைத்துள்ளனர்.

ADVERTISEMENT

இந்த நிலையில் படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னை சத்யம் திரையரங்கில் இன்று (ஜூன் 11) நடைபெற்றது. atharva is the first hero of pariyerum perumal – mari selvaraj

ADVERTISEMENT
நெல்சனின் சமூக பொறுப்புணர்வு! atharva is the first hero of pariyerum perumal – mari selvaraj

அதில் கலந்துகொண்ட இயக்குநர் மாரி செல்வராஜ் பேசுகையில், “சினிமாவில் இயக்குநர்களுக்கு இரண்டு வாய்ப்பு இருக்கு. ஒன்று நமக்கு பிடிச்ச கதையை, யார் சொன்னாலும் விடாப்பிடியாக மாற்றாமல் படம் எடுப்பது. இன்னொன்று எதை காண்பித்தால் நிச்சயம் வெற்றி பெறும், எது நம்மை செலிபிரட்டியாக மாற்றும் என கணக்குப்போட்டு படம் எடுப்பது.

இதில் இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் முதல் வகையைச் சேர்ந்தவர். அவர் எடுத்த ஒருநாள் கூத்து, மான்ஸ்டர், பர்ஹானா என அனைத்து படமுமே அவரின் மனதில் உதித்த கதை, கதாப்பாத்திரங்கள் மட்டுமே. ஒவ்வொரு படத்தையும் சமூக பொறுப்புணர்வுடன் எடுக்கிறார். இதுதான் தற்கால இயக்குநர்களிடம் இருந்து அவரை வேறுபடுத்திக் காட்டுகிறது. அந்தவகையில் நேற்று நான் பார்த்த டிஎன்ஏ திரைப்படம் என் மனசுக்கு நெருக்கமாக இருந்தது” என்றார்.

ADVERTISEMENT

பரியேறும் பெருமாள் முதல் ஹீரோ அதர்வா தான்!

தொடர்ந்து அதர்வா குறித்து பேசுகையில், “நான் முதன்முறையாக ‘பரியேறும் பெருமாள்’ கதையை சொன்ன முதல் ஹீரோ அதர்வா தான்.

எனக்கு முரளி சாரை மிகவும் பிடிக்கும். தமிழ் சினிமாவில் அதிகமாக ஒன் சைடு லவ் பண்ணவர் அவர் தான். முரளி சாருடைய மகன் சினிமாவுக்கு வந்திருக்கிறார் என்று தெரிந்ததும், ‘பானா காத்தாடி’ வந்தவுடன், ‘பரியேறும் பெருமாள்’ கதைக்குள் வச்சி யோசிச்ச ஹீரோ அதர்வா தான்.

ஏனென்றால் முரளி சாருடைய மகன் நம்மைப் போலவே இருப்பார், அவர் இந்தக் கதாபாத்திரத்திற்கு சரியாக இருப்பார் என்று நினைத்து மீட் பண்ணேன். ஆனால் நான் கதை சொன்ன சமயத்தில் அவருடைய தேதிகள் கிடைக்கவில்லை. அன்று ரொம்ப வருத்தப்பட்டேன். முரளி சார் பையனே என்னை இயக்குநராக ஏத்துக்கலனா என்றால், வேறு யார் என்னை இயக்குநராக ஏற்றுக்கொள்வார்கள் என ரொம்ப ஃபீல் பண்ணேன்.

ஆனால் ஒருநாள் அவரைப் பார்க்கும்போது இந்த விஷயங்களையெல்லாம் சொல்வேன் என நினைத்தேன். அதன்படி ஏழு வருடங்களுக்குப் பிறகு இப்போதுதான் அதர்வா ப்ரோவை நெருக்கமாகச் சந்திக்கிறேன்.

இன்னும் பல உயரங்களுக்குச் செல்லக்கூடிய ஆற்றல், வேகம் அதர்வாவிடம் இருக்கிறது. இந்த DNA படம் அவருக்கு முக்கியமான ஒரு படமாக இருக்கும் என நினைக்கிறேன்” என மாரி செல்வராஜ் பேசினார். atharva is the first hero of pariyerum perumal – mari selvaraj

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share