இன்னைக்கு டீக்கடைக்கு போயிருந்தேன். அங்க நண்பர் ஒருத்தர், டீக்கடை பக்கமா சைரன் போட்டு வந்த ஆம்புலன்ஸ் டிரைவரை பாத்து சகட்டுமேனிக்கு திட்டுனாரு.
அத பாத்ததும் ஒன்னும் புரியல… “யோவ் முனுசாமி, ஆம்புலன்ஸ் டிரைவரை ஏன்யா திட்டுற?”னு கேட்டேன்.
அதுக்கு அவர், “இல்ல நண்பா, அவன் எப்போ பாத்தாலும், வெறும் வண்டில சைரன் போட்டுக்கிட்டு தான் போறான்… ரொம்ப கடுப்பா இருக்கு. அதான் திட்டுனேன்’னு சொன்னாரு.
”யோவ், அதுக்கு அவசரமா பேஷன்டை கூப்பிட போற ஆம்புலன்ஸ், காலியா போகாம நாலு பேரை படுக்க வைச்சுட்டா கூட்டிட்டு போக முடியும்?”னு கேட்டேன்.
அதுக்கு அவரு, “இல்ல யாராவது உள்ள இருந்தா தான் நம்புவேன்”னு சொன்னாரு…
அந்த நேரம் பார்த்து அவர் மண்டைல ஒரு மரக்கட்டை டங்குனு விழுந்து ரத்தம் ஆறா ஓடுது… உடனே “ஆம்புலன்ஸூகு வேகமா கால் பண்ணுயா’னு சொன்னாரு… அடுத்த சில நிமிசத்துல சைரன் போட்டு வேகமா வந்த ஆம்புலன்ஸ் அவர ஏத்திகிட்டு ஹாஸ்பிடலுக்கு பறந்துடுச்சி…
நீங்க அப்டேட்ஸ் பாருங்க…

கடைநிலை ஊழியன்
பெங்களூரு தவணாகெரேவைச் சேர்ந்த 4 வயது சிறுமி கடந்த ஏப்ரல் மாதம் தெருநாய் கடித்ததில் ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்டு 4 மாத போராட்டத்துக்குப் பின் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்!
அந்த நாய்க்கு தெரியுமா இந்த சிறுமிக்கு 4 வயசுனு, சிறுமி தான் பாத்து போகனும் – தெரு நாய் ஆர்வலர்கள்

டிங் டாங்
தன்னைக் கவிழ்த்துவிடுபவர்க்காக காத்திருக்கின்றது
“தண்ணீர் கேன்”

Mannar & company™🕗
“சில நேரம் நம்ம வாழ்க்கை மெதுவா நகருகிற மாதிரியே தெரியும்,
ஆனா அந்த மெதுவில் தான் உயிரோட இருக்கும் அழகு இருக்கு.
வேகமில்லைன்னு கவலைப்படாதீங்க வழி தவறாம போனாலே போதும்.”

செங்காந்தள்
குறைந்தபட்ச மாத ரீசார்ஜ் பேக் விலையை உயர்த்திய ஜியோ.
பெட்ரோலில் எத்தனால் கலப்பால் வருமானம் குறைந்து விட்டது போல.

கோவிந்தராஜ்
இந்த பொக்கே கிப்ட் கொடுக்கிறது, என்னை கேட்டா ஒரு முட்டாள் தனமான ஐடியா, 600 ரூபாயிலிருந்து 2000 ரூபாய் வரைக்கும் பொக்கே விக்கிது, ரெண்டு நாளுக்கு அப்புறம் குப்பை தொட்டிக்கு தான் போகப்போகுது. அதுக்கு வேற ஏதாவது கிப்ட் பண்ணலாம்.

Dr. கடல்
சின்ன குழந்தைங்க பாலியல் துன்புறுத்தல கேள்விபட்டு வராத கோவம்
சின்ன குழந்தைங்கள வெறிபுடிச்சு கடிக்குற தெரு நாய ஒழிக்கனும்னு சொன்னா வருதுனா..
சத்தியமா எனக்கு தெரிஞ்சி வெறிபுடிச்சது தெருநாய்க்கு இல்ல..

✒️Writer SJB✒️
எறும்பு பொடி போடுரா,
பல்லிய விரட்டுறா,
கரப்பான்பூச்சுக்கு spray வாங்குறா,
எலிக்கு மருந்து வாங்குறா,
புறா பால்கனிக்கு வர கூடாதுன்னு net போடுறா,
வார வாரம் கோழி ஆடு மாடு மீன்னு வறுத்து திங்குறா,
கேட்டா DOG LOVER ன்றா..🤦
#உயிர்னா எல்லாமே உயிர்தானே?

டீக்கடையார்
நான்கு மாத போராட்டத்திற்குப் பின்னர் இந்த நான்கு வயது சிறுமி தன் உயிரை இழந்து இருக்கிறார் என்று ஒரு செய்தியை படித்தேன்.
அதன்பின்னர் மனதில் ஓடியது இதுதான்!
இந்த காலகட்டத்தில் இந்த குழந்தை அனுபவித்த உடல் சித்திரவதையை கண்டிருந்தால் யாருக்குமே தெருநாய்கள் இருக்கவே கூடாது என்கிற மனநிலை தான் ஏற்படும்.
இந்த குடும்பத்தினர் எவ்வளவு மன உளைச்சலுக்கு ஆளாகி இருப்பார்கள்? அதை நம்மால் யாரும் கற்பனை செய்து கூட பார்க்க முடியாது. ஒரு சிறு குழந்தை தண்ணீர் கூட குடிக்க முடியாமல் தண்ணீரைப் பார்த்தால் பயந்து ஹைட்ரோபோபியா ஏற்பட்டு உடலெல்லாம் நடுநடுங்கிக் கொண்டே ஒவ்வொரு நாளும் இருப்பதை எந்த பெற்றோரால் தாங்க முடியும்?
இனி அந்தப் பெற்றோர்கள் வாழும் காலம் வரை நடைப்பிணமாகத் தான் வாழ்வார்கள். அவர்களுடைய வாழ்க்கை இதோடு முடிந்தது. நினைத்துப் பார்க்கவே மனம் பதறுகிறது.
அந்தக் குழந்தை இந்த பூமிக்கு வந்தது இந்த ரண சித்தரவதையை பெறுவதற்கா? எவ்வளவு கனவுகளோடு அந்தப் பிள்ளையைப் பெற்று வளர்த்துக் கொண்டிருந்திருப்பார்கள் அந்த பெற்றோர்கள்? இனி காலம் முழுவதும் அதை நினைத்து மனம் வருந்தி கொண்டே இருக்க வேண்டும்.
நாய் ஆர்வலர்களே.. இந்த பூமி எல்லோருக்கும் ஆனது தான். ஒத்துக் கொள்கிறோம். ஆனால் ஒரு இனத்தால் மற்றொரு இனம் மிகுந்த வேதனைக்கு உள்ளாகும், தங்கள் வாழ்நாளையே இழக்கும், வாழ்க்கையையே இழக்கும் என்னும் நிலை வரும் பொழுது அந்த இனத்தை கட்டுப்படுத்தி தான் ஆக வேண்டும்.
இந்த உலகம் எல்லோருக்கும் ஆனது என்பதால் நீங்கள் விஷ பாம்புகளை உங்கள் வீடுகளில் வளர்க்க ஒத்துக் கொள்வீர்களா?
லாக் ஆஃப்
