இன்னைக்கு சிஎஸ்கே மேட்ச் பாத்துட்டு வெறுப்புல ஸ்டேடியத்துல இருந்து வீட்டுக்கு வந்துட்டு இருந்தேன். அப்போ கூட வந்த ஒருத்தர் சொல்றாரு..
’சிஎஸ்கே தோத்துடுச்சினு வருத்தப்படாதீங்க… இன்னைக்கு அட்சய திருதியை… எங்க இன்னைக்கு ஜெயிச்சி… அதனால அடுத்தடுத்து மேட்ச்லயும் ஜெயிச்சி தப்பி தவறி பிளே ஆஃப் போனாலும் போயிருவோம்னு தான் இன்னைக்கு இப்படி கேவலமா தோத்தாங்க’னு சொல்லிட்டு போனாரு…
அதுக்கு இன்னொருத்தரு… ’இல்லனா மட்டும் சிஎஸ்கே அப்படி ஜெயிச்சி தள்ளிரும். முந்திலாம் எதிர் டீம் பாத்து தான் கொஞ்சம் பயம் வரும். இப்போலாம் ஹுடா, கம்போஜ்னு சிஎஸ்கே டீம் பாத்தாலே பயமா இருக்கு’னு புலம்பிட்டு போறாரு…
பாவம் 10 ஆயிரம் ரூபாய்க்கு டிக்கெட் வாங்கி மேட்ச் பாக்க வந்துருப்பாரு போல… update kumaru memes and trolls april 30
நீங்க அப்டேட்ஸ் பாருங்க… update kumaru memes and trolls april 30

▶படிக்காதவன்™✍
அடிக்கிற வெயிலுக்கு “மழை பெய்யும்’னு சொல்ற செய்தி கூட கொஞ்சம் இதமாகதான் இருக்கு…

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?
அட்சய திரிதியை அன்னைக்கு அப சகுனமா தங்கத்தை விக்கறேன்றியே, வீடு உருப்படாம போயிரும்பா..
நகைக்கடைகள்ல அட்சய திருதியை அன்னைக்கு என்ன விக்கறாங்க..?
தங்கம்..
நகைக்கடை ஓனர் எல்லாம் உருப்படாம போயிட்டானா..?

கோவிந்தராஜ்
தோழி இன்னைக்கு ஒரு நாள் மட்டும் எங்க வீட்டுல வந்து இருக்கீங்களா…
எதுக்கு டா..
இல்ல அட்சய திருதி அப்போ தங்கத்தை வீட்டுல வாங்கி வச்சா பெருகும்ன்னு சொன்னாங்க அதான் 60 கிலோ தங்கத்தை கொண்டு போயி வைப்போம்ன்னு…

Mannar & company™🕗
பணக்காரன் ஏழையை ஏமாத்துற வியாபாரத்துக்கும்,
ஏழை ஏமாற மறுத்து போராடும் போராட்டத்துக்கும் பெயர்தான் அட்சய திருதியை!!

▶படிக்காதவன்™✍
கடன் வாங்கியாவது நகை வாங்கு அப்பதான் நாங்க நல்லாருக்க முடியும்’னு நகை கடைக்காரர்கள் கண்டுபிடிச்சதுதான் அட்சயதிதி’யாக இருக்கும்…

செங்காந்தள்
வெற்றியும் தோல்வியும் வீரனுக்கு அழகு…
டேய்.. நீ CSK fan தானே?
ஆமா அதுக்கென்ன இப்ப?

கடைநிலை ஊழியன்
சொன்னா புரிஞ்சுக்கோ டி
மாச கடைசில வர்ற அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற அளவுக்கு எல்லாம் நான் சம்பாத்திக்கல..

𝐑𝐚𝐝𝐡𝐢𝐤𝐚
ஏங்க இன்னைக்கு அட்சய திருதியைக்கு என்ன வாங்குனீங்க??
~ கடன் வாங்கினேன். போவியா…🙄

மருதமலை
ஹப்பி: “நைட்டுக்கு என்ன சாப்பாடு?!”
“மட்டன் கிரேவி செஞ்சுருக்கேன்.. தோசை சுட்டுக்கலாம்..”
“என்னது… மட்டன் கிரேவிக்கு தோசையா? நீ தொட்டுக்க செஞ்சுட்டேல.. அப்ப ரெஸ்ட் எடு. நாம பரோட்டா வாங்கிப்போம்..”
“ம்ம் நல்ல ஐடியா தான்.. வாங்கிட்டு வாங்க..”
“ID ரெடிமேட் பரோட்டா தானே? வாங்கிட்டு வந்து வீட்ல சுட்டுக்கலாம்ல..”
“ம்ம் ஆமா.. “
“மைதா நல்லது இல்லையாம்.. கோதுமை வாங்கவா?!”
“சரி வாங்கிட்டு வாங்க..”
“ஆனா டேஸ்ட் மைதா தான் நல்லா இருக்கும்..”
“ஆமா..”
“அப்ப மைதா ப்ரோட்டாவே வாங்கிடவா?!”
“உங்க இஷ்டம் பா..”
“இல்ல.. நீ எதை சொல்றியோ அதை தான் வாங்குவேன்..”
“மைதாவே வாங்குங்க. மலபார் ப்ரோட்டானு போட்ருக்கும்..”
“வாங்கிட்டு வந்தா நீ சுட்டு தருவியா ? இல்லேன்னா நான் சுடனுமா?!”
“நீங்க தான் என்னை ரெஸ்ட் எடுக்க சொல்லிருக்கீங்களே.. அதனால நீங்க தான் சுட போறீங்க..”
“ம்ம்ம்.. நான் வேற ஐடியா வச்சுருக்கேன்..”
“என்ன ஐடியா?!”
“நான் பக்கத்து கடையில் சுட்ட ப்ரோட்டாவே வாங்க போறேன்.. எதுக்கு ரெடிமேட் வாங்கி அதை வீட்ல கொண்டு வந்து சுட்டுக்கிட்டு.. ரெடிமேட் பரோட்டாவை விட இது விலையும் கம்மி.. அவனே சுட்டும் தந்துருவான்.. “
“சரி.. போய் வாங்கிட்டு வாங்க.. “
“இதுல மைதாவா? இல்ல கோதுமையா?!”
“ராசா.. ஆள விடுப்பா. பரோட்டா திங்குற ஆசையே போயிடுச்சு எனக்கு. நான் தோசையே சுட்டுகிறேன். நீங்க பரோட்டா வாங்கிட்டு வந்து சாப்பிடுவீங்களோ.. அல்லது வெறும் குழம்பை குடிச்சுட்டு படுப்பீங்களோ.. உங்க இஷ்டம். என்னை விட்ருங்க.. “
லாக் ஆஃப்