இன்னைக்கு டீக்கடைக்கு போயிருந்தேன். அங்கே ‘காலனி’ வார்த்தையை இனி நீக்கப்படும்னு முதல்வர் ஸ்டாலின் சட்டமன்றத்துல அறிவிச்சத பத்தி ஸ்லாகிச்சி பேசிட்டு இருந்தாங்க.
அப்போ அங்கே திடீர்னு வந்த சந்தேக சங்கர்… அப்ப இந்த ’என்.ஜி.ஓ காலனி’, ’சிஐடி காலனி’, ’காமராஜர் காலனி’னு பேர் இருக்கே… எப்படி கூப்பிடனும்னு கேட்டாரு…
அத ‘நகர்’னு மாத்துனா இனி கூப்பிட மாட்டியானு ஒருத்தர் திருப்பி கேட்டாரு… பதிலே சொல்லாம சங்கர் கிளம்பிட்டாரு. update kumaru memes and trolls april 29
நீங்க அப்டேட்ஸ் பாருங்க! update kumaru memes and trolls april 29

Sasikumar J
~ அட ஏன் அண்ணா அடிக்கிறீங்க..?
~ 7G ரெயின்போ காலனி படத்தை எப்படி சொல்லுறது அப்படின்னு கேட்கிறான்…!

மதுரைபாலன்
என் மனைவியின் ஆன்மிகப் பயணத்ததை தொடர்ந்து இன்று காலை டிபன் சாப்பிடுவதற்காக ஹோட்டலுக்கு சென்று கொண்டிருந்தேன். திடீரென்று ஒரு வீட்டிற்குள் இருந்த நாய் ஒன்று குரைத்துக் கொண்டே என்னை நோக்கி பாய்ந்து வந்தது. ஒரு கணம் ஆடிப் போய்விட்டேன். உடனே நாயின் உரிமையாளர் வந்து அதைப் பிடித்துக் கொண்டு” நீங்க போங்க சார்” என்றார்.
எனக்கு சரியான கோபம் “ஏன் சார் நாய வீட்டுக்குள்ளேயே கட்டி போட்டு வளர்க்க மாட்டீர்களா” என்று கடிந்து கொண்டேன். “இன்னேர வரைக்கும் கட்டி போட்டு தான் வச்சிருந்தேன் கொஞ்ச நேரம் வெளியே போகலாம்ன்னு அவிழ்த்துவிட்டு கயறை தேடுவதற்குள் அது உங்களை நோக்கி வந்துவிட்டது “என்றார். “என்னை கடித்து இருந்தால் “சாரி சார்” என்ற ஒத்த வார்த்தையைச் சொல்லி
விட்டுப் போய் இருப்பீர்கள் அவ்வளவு தானே” என்றேன்.
அதற்கு அவர் “நீங்க லுங்கி கட்டிக்கிட்டு வந்ததுனாலதான்சார் அதுக்கு கோபம் வந்திருக்கு” என்றவர் “நாங்க யாரும் வீட்டுல லுங்கி கட்டுறது இல்ல ட்ரவுசர் தான் போட்டுக்கிருவோம்” என்றார். இதற்குமேல் என்னத்தப் பேசுறது என்றவாறு சில நாட்டு நாய்கள்தான் இன்ன உடை வுடுத்தனும் இன்ன உணவ சாப்பிடனும்னு குரைத்தக் கொண்டிருக்கதுங்கன்னா வீட்டு நாய்களுமா அப்படி இருக்கனும்னு நினைத்துக் கொண்டேன்.

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?
நண்பர்களிடம் கடன், உடன் பணி புரிபவர்களிடம் ஆபிஸ் வேலையில் அல்லது வேறு எதாவது சின்ன சின்ன உதவி என அவ்வப்போது கேட்டுக்கொண்டே இருங்கள்..
அவர்கள் மீது எந்தவித தேவையில்லாத பிரமிப்பையும் வளர்த்துக் கொள்ளாமல் இருக்க உதவும்.

வணங்கான்
ஒரே மேட்ச்ல சச்சின், லாரா ன்னு கம்பேர் பண்ணி எழுதி வியாபாரம் பாத்துட்டு இருக்கானுக..
இன்னும் கொஞ்ச நாள்ல, உண்மையான வயசு 14 கிடையாது, ஊக்க மருந்து சாப்ட்டு விளையாடினான், பேட்ல எக்ஸ்ட்ரா மெட்டீரியல் add பண்ணிருந்தான்னு எழுதியும் வியாபாரம் பாப்பானுக..

கோழிக்கறியான்
ஆபிஸ் மீட்டிங்ல நீ பேசும் போது யாரும் எதுவும் பேசலேன்னா, நீ பேசினது சரின்னு அர்த்தம் கிடையாது. உன்னோட பேசி யாரும் டைம் வேஸ்ட் பண்ண விரும்பலேன்னு அர்த்தம்..

செங்காந்தள்
வலது கை என்பது இப்போது நிறையப் பேருக்கு மொபைல் போன் தான்…!!!

குருநாதா
எப்பவாவது வருவது அம்மாவாசை
எப்போதும் வருவது அம்மா’வசை

பர்கத்தா
குமரிப்பெண்ணின் உள்ளத்திலே
குடியிருக்க நான் வரவேண்டும்
குடியிருக்க நான் வருவதென்றால்
வாடகை என்ன தரவேண்டும்?
ஷீ ~ ஏற்கனவே வேற ஆளு குடி இருக்கான் டா
லாக் ஆஃப்