ADVERTISEMENT

யாரு சாமி நீயி? : அப்டேட் குமாரு

Published On:

| By christopher

இன்னைக்கு டீக்கடைக்கு போயிருந்தேன். அங்க, “பிரபல இருட்டு கடை அல்வா கடை உரிமையை எழுதிக் கேட்ட மருமகன்… மாமியார் கண்ணீர் மல்க பேட்டி” இந்த செய்திய பேப்பர்ல படிச்சிட்டு ‘Arranged marriages are scam’னு சொல்லி வருத்தப்பட்டாரு நண்பர்.

அவருகிட்ட, ’காதல் மனைவியை 16 துண்டுகளாக வெட்டி கொன்று சூட்கேஸில் எடுத்துச்சென்ற கணவன்’னு என் கிட்ட இருந்த பேப்பர் நியூஸ எடுத்துக் காட்டினேன்… ‘love marraiages are hell’nu சொன்னாரு.

ADVERTISEMENT

”யோவ் என்னய்யா, அரேஞ்ச் மேரேஜயும் திட்டுற, லவ் மேரேஜயும் திட்டுற… யாரு நீயி?”னு கேட்டேன்.

”எனக்கு லவ்வும் செட் ஆகல… கல்யாணமும் நடக்கல… அதான் இப்படி பேசுறேன்”னு சொன்னாரு… பாருங்க… சிரிச்சிட்டேன்.

ADVERTISEMENT

நீங்க அப்டேட்ஸ் பாருங்க! update kumaru memes and trolls april 17

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?

ADVERTISEMENT

அண்ணாமலை புயல், நான் தென்றல் – நயினார் நாகேந்திரன்

யோவ் என்னையும் ஏதாச்சு சொல்லி பில்டப் ஏத்து, நானும் முன்னாள் தலைவர் தான் ~ எல்.முருகன்

கடைநிலை ஊழியன்

திருடன் to ரயில்வே மினிஸ்டர் – ஹலோ.. நான் திருடன் பேசுறேன் சார்.. 7 ‘லாவது coach ல இருந்த ATM ல இருந்த 2 லட்சம் ரூபாய் எடுத்துகிட்டேன் சார்.. அப்பறம், இந்த 100 ரூபாய் கட்டு வைக்காதிங்க சார்.. 500 ரூபாய் மட்டும் வைங்க.. தூக்கிட்டு போக கஷ்டமா இருக்கு..

கோவிந்தராஜ்

~ சும்மாவே பசங்களுக்கு பொண்ணு கிடைக்க மாட்டிங்குது

இப்ப தங்கம் விலை Rs 70000.. வெளங்குமா?

குருநாதா

எவ்ளோ புதுப்புது பிரச்சனை வந்தாலும் அத left hand ல deal பண்ணிருவேன்

right hand ல?

பழைய பிரச்சனைய deal பண்ணிட்டு இருப்பேன்

காம்னா

me ~ ஹாய் தோழி birth date என்ன?

she ~ எதுக்கு?

me ~ நிலா தோன்றிய வருடம் என்னனு TNPSC exam ல கேட்டாங்க

she ~ செருப்பு பிஞ்சிரும்

me ~ என்னங்க இப்படியா உங்கம்மா பேர் வச்சாங்க…

லாவண்யா

கையில் கொஞ்சம் காசு இருந்தால்
நீதான் அதற்கு எஜமானன்
கழுத்து வரைக்கும் காசு இருந்தால்
அதுதான் உனக்கு எஜமானன்

காசே இல்லைனா?

கடன்குடுக்குறவன் உனக்கு எஜமானன்

Sasikumar J

~ ஆபீஸ் கிட்ட வந்த உடனே மழை பெய்யுது முன்னையே தெரிஞ்சிருந்தா..!

~ ஏன் ரெயின் கோட்டு எடுத்துட்டு வந்து இருப்பியா…?

~ இல்ல லீவு போட்டு இருப்பேன்…

சரவணன்

உனக்கு எதுக்குடா இளையராஜா நோட்டீஸ் அனுப்புனாரு

ராஜா சார் பாட்ட ரிங்க் டோனா வச்சுருந்தேன்..படம் பாக்கும் போது எவனோ கால் பண்ணி தொலச்சிட்டான்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share