அதிர்ச்சியில் ட்ரம்ப்… மகிழ்ச்சியில் உலக நாடுகள்… நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

Published On:

| By Minnambalam Desk

Trump tariffs ruled illegal

கடந்த ஏப்ரல் மாதம் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உலக நாடுகளுக்கு பரஸ்பர வரிவிதிப்பை (Reciprocal Tariff) அறிவித்தார். Trump tariffs ruled illegal

இந்த வரி விதிப்பிற்கு பிறகு உலக அளவில் வர்த்தகம் மற்றும் பங்குச்சந்தை மிகப்பெரிய அளவிற்கு நெருக்கடியை சந்தித்தது. இந்த வரியை அறிவித்த பிறகு சில நாட்களுக்குள்ளாகவே இதை மூன்று மாதங்கள் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்தார். Trump tariffs ruled illegal

ADVERTISEMENT

இந்த நிலையில், உலகநாடுகளுக்கு ட்ரம்ப் வரிகள் விதித்ததை சட்டவிரோதம் என்று அமெரிக்க வணிக நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு வழங்கியுள்ளது.

மேலும், இந்த வரிகளை விதிப்பது அதிபரின் அதிகார வரம்பிற்கு வெளியே செல்கிறது என நீதிமன்றம் கூறியுள்ளது.

ADVERTISEMENT
Trump tariffs ruled illegal

தீர்ப்பின் முக்கிய காரணம்:

அமெரிக்க அரசியல் அமைப்பின் படி, வெளிநாடுகளுடன் வணிக ஒழுங்குகளை நிர்வகிக்க Congress சபைக்கு மட்டும் அதிகாரம் உள்ளது.

ADVERTISEMENT

ஜனாதிபதி தனது அவசரகால அதிகாரங்களை பயன்படுத்தி வரிகளை விதிக்க முடியாது.

ட்ரம்ப் இந்த வரிகளை International Emergency Economic Powers Act (IEEPA) என்ற சட்டத்தின் கீழ் விதித்தார்.

IEEPA சட்டம் பொதுவாக பயங்கரவாதிகள் அல்லது அமெரிக்காவுக்கு எதிராக செயல்படும் நாடுகள் மீது பொருள் முடக்கம் செய்ய பயன்படுத்தப்பட்டது.

ஆனால், ட்ரம்ப் இந்தச் சட்டத்தை முதன்முறையாக வரிகள் விதிக்க பயன்படுத்தினார். அதுவே சட்டபூர்வ பிரச்சனையாக மாறியது.

ஆனால், அந்தச் சட்டம் இறக்குமதி வரிகளை விதிக்க அனுமதிக்கவில்லை. எனவே அது சட்டவிரோதம் என்று கூறப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தின் முக்கிய கருத்து:

“அதிபரின் வரி உத்தரவு புரிதலற்றதா அல்லது பயனற்றதா என்பதை நாம் தீர்மானிக்கவில்லை. ஆனால் இது சட்டப்படி அனுமதிக்கப்படாத ஒன்றாகவே இருக்கிறது.”

ஜனவரி மாதத்திலிருந்து வெளியான அனைத்து பொதுவான வரி உத்தரவுகளும் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். Trump tariffs ruled illegal

இது தொடர்பாக ட்ரம்ப் நிர்வாகம் கூறியதாவது ‘இந்த தீர்ப்புக்கு எதிராக, ட்ரம்ப் நிர்வாகம் மேல்முறையீடு செய்துள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளது.

அதே நேரத்தில், வெள்ளை மாளிகை (White House) கூறியதாவது “நாட்டின் வணிகச் சுமை ஒரு தேசிய அவசரநிலை ஆகும். இது அமெரிக்க தொழிலாளர்களுக்கு மற்றும் பாதுகாப்புத் துறைக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த தேசிய அவசர நிலையை எப்படி கையாள வேண்டும் என்பதில் நீதிபதிகளுக்கு தீர்மானம் எடுக்கும் உரிமை இல்லை.” என்று குறிப்பிட்டுள்ளது.

இந்த தீர்ப்பு வெளியானவுடன், பங்கு சந்தை உயர்ந்தது, அமெரிக்க டாலர் மதிப்பு உயர்ந்தது. மேலும், ஆசிய பங்கு சந்தைகளும் வளர்ச்சி கண்டன.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share