தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வீட்டுக்கு நடிகை திரிஷா வருகை தந்துள்ளார்.
முதல்முறையாக தேர்தலை எதிர்கொண்ட தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை வகிக்கிறது. பெரம்பூர், திருச்சி கிழக்கில் போட்டியிட்ட விஜய் இரண்டு தொகுதியிலுமே முன்னிலை வகிக்கிறார்.
தவெக வெற்றிபெறவிருக்கும் நிலையில், விஜய்யின் தோழியான திரிஷா தற்போது அவரது நீலாங்கரை வீட்டுக்கு வருகைத் தந்துள்ளார்.
இன்று திரிஷாவின் பிறந்தநாள். இதை முன்னிட்டு திருப்பதிக்கு சென்ற திரிஷா தற்போது விஜய் வீட்டுக்கு வந்துள்ளார்.
