நீட் தேர்வுக்கு தயாராகி வந்த திருச்சி பிளஸ் 1 மாணவி தூக்கிட்டு தற்கொலை!

Published On:

| By Mathi

Neet Trichy Suicide

இளநிலை மருத்துவ படிப்புக்கான (எம்பிபிஎஸ்) நீட் நுழைவுத் தேர்வுக்கு தயாராகி வந்த திருச்சியைச் சேர்ந்த பிளஸ் 1 மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. Neet Trichy Suicide

திருச்சி இனியானூர் டீக்கடை பெரியசாமியின் மகள் தர்ஷனா, அப்பகுதியில் தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார். அத்துடன் நீட் நுழைவுத் தேர்வு பயிற்சி வகுப்பிலும் படித்து வந்தார்.

ADVERTISEMENT

நீட் தேர்வுக்கான பயிற்சி வகுப்பில் முதல் பருவ தேர்வு அண்மையில் நடத்தப்பட்டது. இதில் மாணவி தர்ஷனா குறைவான மதிப்பெண்கள் பெற்றதாக கூறப்படுகிறது. இதனால் கடந்த சில நாட்களாக மாணவி தர்ஷனா வேதனையில் இருந்து வந்துள்ளார்.

இந்த நிலையில் வீட்டு மாடியில் உள்ள அறையில் தர்ஷனா, மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த தற்கொலை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக சோமரசம்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share