தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த 24 மணிநேரத்தில் பல இடங்களில் மிக அதீத கனமழை கொட்டித் தீர்த்துள்ளது.
வங்க கடல் மற்றும் அரபிக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதிகள் வலுவடைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலங்களாக மாறி உள்ளன. வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்க்கிறது. இதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சில மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
இதனிடையே இன்று அதிகாலை 5.30 மணி வரையிலான 24 மணிநேரத்தில் புதுச்சேரி யூனியன் பிரதேசம் காலாப்பட்டு பகுதியில் 25 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.
கடலூரில் 17.4 செ.மீ. மழை பதிவாகி இருக்கிறது. சென்னை நுங்கம்பாக்கத்தில் 9 செ.மீ. மழை பதிவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
