வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வரும் நிலையில் தமிழகத்தில் இன்று 15 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை கடந்த 16-ந் தேதி தொடங்கியது. தற்போது அரபிக் கடல் மற்றும் வங்க கடல் இரண்டிலுமே குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளது. வங்க கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக கரையை கடக்க உள்ளது.
இதனால் தமிழகத்தில் அதீத கனமழைக்கான ரெட் அலர்ட், மிக அதிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது.
இதனையடுத்து மொத்தம் 14 மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை அறிவித்துள்ளனர்.
திருச்சி
செங்கல்பட்டு
காஞ்சிபுரம்
திருவள்ளூர்
கள்ளக்குறிச்சி
ராணிப்பேட்டை
கடலூர்
நாகப்பட்டினம்
திருவாரூர்
மயிலாடுதுறை
தஞ்சாவூர்
விழுப்புரம்
ஆகிய மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை
சேலம்
புதுக்கோட்டை
பெரம்பலூர்
நாமக்கல்
திருப்பூர்
கரூர்
ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி- காரைக்காலில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
