தேர்தல் பிரச்சாரம்!
திமுக தலைவர் ஸ்டாலின் – தருமபுரி, கிருஷ்ணகிரி
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி – காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்பதூர்
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை – ஸ்ரீபெரும்பதூர், திருவள்ளூர், மத்திய சென்னை, வட சென்னை. தென் சென்னை
தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா – நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் – ஈரோடு
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் – நெல்லை, தென்காசி, விருதுநகர்
புனித வெள்ளி!
இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நாளை நினைவு கூறும் வகையில், புனித வெள்ளி இன்று (மார்ச் 29) அனுசரிக்கப்படுகிறது.
புத்தக வெளியீட்டு விழா!
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி துணை தலைவர் கோபண்ணா எழுதிய பாசிசம் வீழட்டும் இந்தியா மீளட்டும் புத்தக வெளியீட்டு விழா சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தில் இன்று நடைபெறுகிறது.
உயிர் தமிழுக்கு டீசர் ரிலீஸ்!
ஆதம்பாவா இயக்கத்தில் அமீர் நடித்த உயிர் தமிழுக்கு திரைப்படத்தின் டீசர் இன்று வெளியாகிறது.
பெட்ரோல், டீசல் விலை!
சென்னையில் இன்று 13-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.75-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.92.34-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சிறப்பு பேருந்துகள் இயக்கம்!
புனித வெள்ளி மற்றும் வார விடுமுறையை முன்னிட்டு சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து இன்று 300 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.
வானிலை நிலவரம்!
தமிழகத்தில் இன்று வறண்ட வானிலை நிலவும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்று வெளியாகும் படங்கள்!
ஆண்ட்ரியா நடித்த கா, தி பாய்ஸ், பூமர் அங்கிள், இடி மின்னல் காதல், நேற்று இந்த நேரம், வெப்பம் குளிர் மழை, ஆகிய திரைப்படங்கள் இன்று திரையரங்குகளில் வெளியாகிறது.
சுசூகி V-Strom 800DE பைக் அறிமுகம்!
சுசூகி நிறுவனம் V-Strom 800DE மாடல் மோட்டார் சைக்கிளை இந்தியாவில் இன்று அறிமுகம் செய்கிறது.
பெங்களூரு, கொல்கத்தா மோதல்!
இன்றைய ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டியில் பெங்களூரு, கொல்கத்தா அணிகள் மோதுகின்றன.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…