Ruturaj Gaikwad: 2024 ஐபிஎல் தொடரில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை இளம் வீரர் ருதுராஜ் கெய்க்வாத் வழிநடத்துவார் என அந்த அணியின் நிர்வாகம் தொடர் துவங்குவதற்கு ஒரு நாள் முன்னதாக அறிவித்தது.
இதைத் தொடர்ந்து, சென்னை சூப்பர் கிங்ஸ் விளையாடிய முதல் போட்டியில், ருதுராஜ் தலைமையிலான அணி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
அதை தொடர்ந்து, 2வது போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை 63 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வீழ்த்தியது. இந்த போட்டியில், ருதுராஜ் கெய்க்வாத்தின் கேப்டன்ஸி பெரிதும் பாராட்டப்பட்டது. குறிப்பாக, சென்னை அணியின் பந்துவீச்சின்போது அவர் எடுத்த முடிவுகளை ரசிகர்கள் பாராட்டினர்.
இந்த 2 போட்டிகளிலும், துவக்க வீரராக களமிறங்கிய நியூசிலாந்து வீரர் ரச்சின் ரவீந்திரா, சென்னை அணிக்காக ஒரு அதிரடி துவக்கத்தை வழங்கினார். பெங்களூருவுக்கு எதிராக 15 பந்துகளில் 37 ரன்கள், குஜராத்துக்கு எதிராக 20 பந்துகளில் 46 ரன்கள் விளாசினார்.
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு சிஎஸ்கே அணி சார்பில் எம்.எஸ்.தோனி, ரவீந்திர ஜடேஜா, ரச்சின் ரவீந்திரா மற்றும் ஷிவம் துபே ஆகியோர் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றனர்.
அப்போது, அந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர், “2வது போட்டியில் கேட்சை தவறவிட்டபோது, நீங்கள் தோனியை பார்த்தீர்களா? அவரது ரியாக்சன் என்னவாக இருந்தது? உங்களிடம் எதுவும் சொன்னாரா?” என ரச்சின் ரவீந்திராவை பார்த்து கேள்வி எழுப்பினார்.
அப்போது, உடனடியாக குறுக்கிட்ட தோனி, “தற்போது சென்னை அணிக்கு புதிய கேப்டன் உள்ளார்” என தெரிவித்தார்.
தொடர்ந்து, அந்த புதிய கேப்டனான ருதுராஜ் கெய்க்வாட் குறித்து பேசிய தோனி, “நான் மைதானத்தில் பெரிதும் ரியாக்ட் செய்யும் ஆள் கிடையாது, குறிப்பாக யாராவது அவர்களது முதல் அல்லது இரண்டாவது போட்டியில் விளையாடும்போது. ருதுவும் அதேபோல தான் என நான் நினைக்கிறேன்” என தெரிவித்தார்.
MS Dhoni said "There is a new Captain". (Smiles)
– Dhoni is quick in responses as his stumpings. 😀👌pic.twitter.com/GbpKAdR7TO
— Johns. (@CricCrazyJohns) March 28, 2024
சென்னை அணி தனது 3வது போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை எதிர்கொள்கிறது. அப்போட்டி, வரும் மார்ச் 31 அன்று விசாகப்பட்டினத்தில் உள்ள ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
– மகிழ்
’இதாங்க அமித் ஷாக்கு ஸ்கிரிப்ட்’ : அப்டேட் குமாரு
”விலைவாசி குறைய வேண்டுமென்றால்…” : ஐடியா சொன்ன கதிர் ஆனந்த்
முதல் பாதியில் அதிர்ச்சி… இரண்டாம் பாதியில் அதிரடி : டெல்லியை பந்தாடிய பராக்!