டிஎன்பிஎல் வேலைவாய்ப்பு 2026… 7 மேலாண்மை பணியிடங்கள்: டிகிரி, எம்பிஏ படித்தவர்கள் அப்ளை பண்ணலாம்!

Published On:

| By Santhosh Raj Saravanan

tnpl manager assistant recruitment 2026

தமிழ்நாடு அரசின் நிறுவனமான தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனம் (TNPL) சார்பில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் மொத்தம் 7 மேலாண்மை பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் மார்ச் 29, 2026க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பணியிடங்கள் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்படுகின்றன.

ADVERTISEMENT

காலியிடங்கள் விவரம் (Vacancies Details)

டிஎன்பிஎல் அறிவிப்பின்படி:

  • ஜெனரல் மேனேஜர் (ப்ரொடக்ஷன்) – 1
  • டெப்யூட்டி ஜெனரல் மேனேஜர் – 1
  • அசிஸ்டன்ட் ஜெனரல் மேனேஜர் – 1
  • அசிஸ்டன்ட் மேனேஜர் (சிமெண்ட் மார்க்கெட்டிங்) – 3
  • அசிஸ்டன்ட் மேனேஜர் (லாபோரட்டரி) – 1

மொத்தம் 7 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

ADVERTISEMENT

கல்வித் தகுதி (Educational Qualification)

பணியிடத்தைப் பொறுத்து தகுதி மாறுபடும்:

  • பி.இ / பி.டெக் (கெமிக்கல், பேப்பர் டெக்னாலஜி போன்ற துறைகள்)
  • அல்லது டிகிரி + எம்பிஏ (மார்க்கெட்டிங்)
  • அல்லது எம்.எஸ்.சி (கெமிஸ்ட்ரி)

மேலும், சம்பந்தப்பட்ட துறையில் 8 முதல் 29 ஆண்டுகள் வரை அனுபவம் அவசியம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

வயது வரம்பு

பணியிடத்திற்கேற்ப வயது வரம்பு:

  • அசிஸ்டன்ட் மேனேஜர் : 28 – 40 வயது
  • அசிஸ்டன்ட் ஜெனரல் மேனேஜர் : 43 – 50 வயது
  • டெப்யூட்டி ஜெனரல் மேனேஜர் : 46 – 55 வயது
  • ஜெனரல் மேனேஜர் : 49 – 55 வயது

அரசு விதிகளின்படி ஒதுக்கீட்டு பிரிவினருக்கு வயது தளர்வு வழங்கப்படும்.

சம்பளம்

தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ₹31,100 முதல் ₹2,14,790 வரை (பதவியைப் பொறுத்து) சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு முறை

இந்த பணியிடங்களுக்கு முதலில் விண்ணப்பங்கள் ஸ்கிரீனிங். அதன் பிறகு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படும்.

எப்படி விண்ணப்பிப்பது?

விண்ணப்பிக்கும் முறை:

  • டிஎன்பிஎல் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து விண்ணப்பப் படிவம் டவுன்லோட் செய்ய வேண்டும்
  • அதை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும்

முகவரி:

Chief General Manager (HR),

Tamil Nadu Newsprint and Papers Limited,

No.67, Anna Salai, Guindy, Chennai – 600032

விண்ணப்பிக்க கடைசி தேதி

மார்ச் 29, 2026

தமிழ்நாடு அரசின் முக்கிய நிறுவனமான டிஎன்பிஎலில் மேலாண்மை நிலை பணியில் சேர விரும்பும் அனுபவமுள்ள நிபுணர்களுக்கு இந்த வேலைவாய்ப்பு ஒரு முக்கிய வாய்ப்பாக பார்க்கப்படுகிறது என்று வேலைவாய்ப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share