ADVERTISEMENT

வேலைவாய்ப்பு : அறநிலையத் துறையில் பணி!

Published On:

| By Kavi

TNHRCE Music Teacher Recruitment 2025

அருள்மிகு வடபழநி ஆண்டவர் திருக்கோயில் நிர்வாகத்தின் கீழ் புதியதாகத் தொடங்கப்பட உள்ள ஓதுவார் பயிற்சிப் பள்ளிக்கு முற்றிலும் தற்காலிகமாகத் தொகுப்பூதியத்தில் ஆசிரியர் பணியிடங்களை நேர்முகத் தேர்வு வாயிலாக நிரப்புவதற்குத் தகுதியுடைய இந்து மதத்தைச் சார்ந்த நபர்களிடமிருந்து அறநிலையத் துறை விண்ணப்பங்களை வரவேற்கிறது.

பணியிடங்கள் : 3

ADVERTISEMENT

பணியின் தன்மை : தேவார ஆசிரியர்

சம்பளம் மாதம் : ரூ.25,000/-

ADVERTISEMENT

கல்வித் தகுதி: சமய நிறுவனங்கள் அல்லது அரசு நிறுவனங்கள் அல்லது ஏனைய யாதொரு நிறுவனங்கள் நடத்தும் மூன்றாண்டு “பன்னிரு திருமுறை” பாடப்பிரிவை முடித்ததற்கான தேவாரப் பாடசாலைகள் வழங்குகின்ற சான்றிதழைப் பெற்றிருக்க வேண்டும்.

பணியின் தன்மை : இசை ஆசிரியர்

ADVERTISEMENT

சம்பளம் மாதம் : ரூ.25,000/-

கல்வித் தகுதி: குரலிசையில் மூன்று வருட பட்டயப்படிப்பு பெற்றிருக்க வேண்டும் அல்லது இசையில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.

பணியின் தன்மை : தமிழ் ஆசிரியர்

சம்பளம் மாதம் : ரூ.25,000

கல்வித்தகுதி: தமிழில் இளங்கலைப் பட்டப்படிப்பு மற்றும் இளங்கலை கல்வியியல் பட்டப்படிப்பு

கடைசித் தேதி : பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய தகுதிச் சான்றுகளுடன் நேரடியாகவோ தபால் மூலமாகவோ 30.09.2025 அன்று மாலை 05.45 மணிக்குள் திருக்கோயில் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்.

முடித்திருக்க வேண்டும்.

விண்ணப்பப்படிவம் தகுதிகள் மற்றும் இதர விவரங்களுக்கு www.hrce.tn.gov.in மற்றும் www.vadapalaniandavar.hrce.tn.gov.in ஆகிய இணைய லிங்க்குகளை க்ளிக் செய்து தெரிந்துகொள்ளலாம்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share