குழந்தைகள் உரிமைகள் ஆணைய தலைவர், உறுப்பினர்கள் நீக்கம் செல்லும்!

By Minnambalam

|

Published on 15 Sep 2022, 9:20 PM

குழந்தைகள் உரிமைகள் ஆணையம் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நீக்கத்தை ரத்து செய்த தனி நீதிபதி உத்தரவுக்குத் தடை விதித்து இரு நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத் தலைவர் சரஸ்வதி, உறுப்பினர்கள் சரண்யா ஜெயக்குமார், துரைராஜ், முரளி குமார் உள்ளிட்டோரைப் பதவி நீக்கம் செய்து, கடந்த பிப்ரவரி மாதம் தமிழக அரசு உத்தரவிட்டது.

ADVERTISEMENT

மேலும், புதிய தலைவர் மற்றும் உறுப்பினர்களைத் தேர்வு செய்ய, ஆணையத்தின் செயலருக்கு அதிகாரம் வழங்கப்பட்டது.

தமிழக அரசின் இந்த உத்தரவை எதிர்த்து, ஆணையத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.

ADVERTISEMENT

இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற தனிநீதிபதி அப்துல் குத்தூஸ் முன் விசாரணைக்கு வந்தது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, “ஆணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை நீக்கும் முன்பாக, அதற்கான உரிய நடைமுறைகள் எதையும் பின்பற்றவில்லை.

ADVERTISEMENT

குழந்தைகள் உரிமைகள் சட்டப்படி, ஆணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் இது தொடர்பாக விளக்கம் அளிக்க உரிய அவகாசம் வழங்காமல், அவர்களின் நியமனத்தை ரத்து செய்தது சட்ட விரோதம்” என்று கூறி, அரசாணையை ரத்து செய்து உத்தரவிட்டார்.

குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நீக்கத்தை ரத்து செய்த தனிநீதிபதியின் உத்தரவை எதிர்த்து அரசு தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த மேல்முறையீட்டு வழக்கை இன்று (செப்டம்பர் 15) இரு நீதிபதி அமர்வு விசாரித்தது. விளக்கம் தர அவகாசம் அளிக்காமல் அரசாணையை ரத்து செய்தது சட்டவிரோதம் எனத் தமிழக அரசு சார்பில் குற்றம் சாட்டப்பட்டது. மேலும் அரசுக்குத் தலைவர் மற்றும் உறுப்பினர்களை நீக்குவதற்கு உரிமை இருக்கிறது எனவும் தெரிவிக்கப்பட்டது.

இந்த விசாரணைக்குப் பிறகு உயர்நீதிமன்ற நீதிபதிகள் தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டனர்.

மோனிஷா

சல்லாப டாக்டர் சதீஷ்குமாரின் ஆபாச வீடியோ: கதறும் பெண்!

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Minnambalam

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel