துடரும் வில்லன் – யார் இந்த பிரகாஷ் வர்மா?

Published On:

| By uthay Padagalingam

Thudarum Movie Villain

Thudarum Movie Villain

’நீ போ மோனே தினேஷா’ என்று மோகன்லால் பேசிய புகழ்பெற்ற ‘பஞ்ச்’ டயலாக்குகளில் ஒன்றை உதிர்த்து, ‘துடரும்’ படத்தைப் பார்க்க வரும் ரசிகர்களைப் பதைபதைக்க வைக்கிறது அதில் வரும் இன்ஸ்பெக்டர் ஜார்ஜ் மாதன் பாத்திரம். அதனை ஏற்று நடித்திருப்பவர் பிரகாஷ் வர்மா. இதுதான் இவரது அறிமுகத் திரைப்படம்.

யார் இவர்? இவ்வளவு நாட்களாக எங்கிருந்தார்? பல படங்களில் நடித்த அனுபவத்தை முதல் படத்திலேயே வெளிப்படுத்தியது எப்படி? இவர் நாடகப் பின்னணியில் இருந்து வந்தவரா? ஐம்பது வயதுக்கு மேல் அறிமுகமாகி ஒருவரால் புகழ் பெற முடியுமா? இப்படி எத்தனையோ கேள்விகளுக்குப் பதிலளிக்கும் விதமாக இருக்கிறது பிரகாஷ் வர்மாவின் கடந்த கால வாழ்க்கை. Thudarum Movie Villain

கேரளாவில் பிறந்த பிரகாஷ் வர்மா, தற்போது பெங்களூருவில் மனைவி சினேகா ஐப் மற்றும் மூன்று குழந்தைகளுடன் வசித்து வருகிறார். அங்கு ‘நிர்வாணா பிலிம்ஸ்’ எனும் விளம்பரப்பட தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

Thudarum Movie Villain

2001ஆம் ஆண்டில் சினேகா உடன் இணைந்து இந்நிறுவனத்தைத் தொடங்கியிருக்கிறார் பிரகாஷ். அதன் மூலமாகப் பல பிரபலமான, மக்களைக் கவர்ந்த விளம்பரப் படங்களை ஆக்கியிருக்கிறார். இதன் சார்பில் தயாரிக்கப்படுபவற்றில் பல சர்வதேச அளவில் விளம்பரப்படங்களுக்கான விருதுகளைப் பெற்றிருக்கின்றன.

ஆலப்புழாவில் உள்ள எஸ்.டி.கல்லூரியில் பயின்ற பிரகாஷ் வர்மா, மலையாளத் திரையுலகில் உதவி இயக்குனராகப் பணியாற்றியிருக்கிறார். பிரபல இயக்குனர்கள் லோகிததாஸ், விஜி தம்பியின் படங்களில் பணியாற்றியவர், ஒரு பிரபல விளம்பரப்பட இயக்குனரிடம் உதவியாளராக இருந்திருக்கிறார். அதன் தொடர்ச்சியாக விளம்பரப்படங்கள் இயக்கத் தொடங்கியிருக்கிறார். Thudarum Movie Villain

பிஸ்லெரி, கிட்கேட், நெஸ்லே, நெட்ப்ளிக்ஸ், அமேசான் பிரைம் உட்படப் பல பன்னாட்டு நிறுவனத் தயாரிப்புகளின் விளம்பரப் படங்களை ஆக்கியிருக்கிறார். கேரளம், மேற்குவங்கம், மத்தியப்பிரதேசம் மற்றும் துபாய் சுற்றுலா சார்ந்த இவரது விளம்பரப் படங்கள் தனித்துவமானதாகத் தெரியும். Thudarum Movie Villain

வோடஃபோன் நிறுவனம் சார்ந்த ‘ஜுஜு’ விளம்பரப்படங்களின் பின்னால் இருப்பவர் இவர்தான் என்பது இன்னொரு ஆச்சர்யமான தகவல்.

வெள்ளையான, முட்டை போன்ற வடிவத் தலை மற்றும் உடல் பாகங்களைக் கொண்ட, அவசரகதியிலான செயல்பாடுகளால் சிரிப்பை வரவழைக்கிற அனிமேஷன் பாத்திரங்கள் வழியே ‘வோடஃபோன்’ நிறுவனத் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்த்ததோடு, அப்படங்களின் உருவாக்கத்தில் அழகியலையும் உணர்வு வெளிப்பாடுகளையும் புகுத்தியிருப்பார் பிரகாஷ்.

’க்ளே அனிமேஷன்’ நுட்பத்தை விடுத்து, உண்மையான கலைஞர்களுக்கு வேடமிட்டு, அதற்கேற்ற செட் அமைத்து, இப்படங்களைக் காட்சிப்படுத்தியது இவரது ‘மினிமலிச’ மேக்கிங்கை காட்டும்.

Thudarum Movie Villain

Thudarum Movie Villain

அபாரமான நடிப்புக் கலைஞர்கள், அவர்கள் வெளிப்படுத்துகிற நுணுக்கமான நடிப்பு, அதன் வழியே எளிமையான மனித வாழ்வின் அற்புதமான தருணங்களைத் திரையில் காட்டுகிற ஆக்கமே பிரகாஷின் தனித்துவம். வெறுமனே சில நொடிகளில் குறிப்பிட்ட சூழலை நம் மனதில் பதித்துவிடுகிற கதை சொல்லலைக் கொண்டது இவரது காட்சியாக்க பாணி.

’நெஸ்ட்லே ஷேர் யுவர் குட்னெஸ்’ எனும் தலைப்பில் வெளியான விளம்பரப்படம் அதற்கொரு உதாரணம். சுமார் நான்கு வயதான சிறுவன், தனது வயதையொத்த ஒரு சிறுமியைப் பெற்றோர் தத்தெடுப்பதைப் பொறுக்கமுடியாமல் அடம்பிடிக்கிறான். அப்பெண்ணைத் துன்புறுத்த முயல்கிறான். மெல்ல குறும்புகளாலும் விளையாட்டுத்தனங்களாலும் அவர்களுக்கிடையே பாசம் முளைப்பதாக முடிவடையும் அந்த விளம்பரப்படம்.

வெறுமனே மனித உணர்வுகளை வெளிப்படுத்துவது மட்டுமல்லாமல், அபாரமான அழகியல் ரசனையும் அவரது காட்சியாக்கத்தில் நிறைந்திருப்பதைக் காண முடியும்.

2009ஆம் ஆண்டு ஹாலிவுட் இயக்குனர் மைக்கேல் ஃபேயின் ’தி இன்ஸ்டியூட்’ நிறுவனத்திற்கான விளம்பரப்படங்களை இயக்குவதற்கான ஒப்பந்தத்தை இவர் பெற்றது அதற்கான வெகுமதிகளில் ஒன்று.

இவரது விளம்பரப் படங்களில் வசனங்கள் குறைவு. ‘எனக்கு இந்தி தெரியாது. சின்ன வயசுல ஸ்கூல்ல இங்கிலீஷ்ல தான் பேசணும்கற கட்டாயம் இருந்தப்போ கூட மலையாளத்துலதான் பேசியிருக்கேன். பெங்களூரு வந்தபிறகு அதுவும் போச்சு. இப்போ எந்த மொழியில பேசுறதுன்னு ஒரு திணறல் வரும்’ என்று ஒரு பேட்டியில் இதற்குப் பதிலளித்திருக்கிறார் பிரகாஷ் வர்மா.

இவர் மலையாளத்தில் ஒரு திரைப்படத்தையும் தயாரித்திருக்கிறார். ’ஏழு சுந்தர ராத்திரிகள்’ எனும் அப்படம் 2013இல் வெளியானது. லால் ஜோஸ் இயக்கிய அப்படத்தில் திலீப், பார்வதி, ரீமா கல்லிங்கல், முரளி கோபி உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

இப்படியொரு பின்னணியில் இருந்து வந்தவர் பிரகாஷ் என்று தெரிய வந்தபிறகு, ‘துடரும்’ படத்தில் அவர் மிரட்டல் நடிப்பைத் தந்திருப்பது ஆச்சர்யத்தைத் தராது. அதையும் மீறி, திரையுலகைச் சேர்ந்தவர்களே அவரது நடிப்பை வியப்புடன் உற்று நோக்கிக் கொண்டிருப்பார்கள். Thudarum Movie Villain

Thudarum Movie Villain
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share