ADVERTISEMENT

டாஸ்மாக் கடைகளில் காலி பாட்டில்களைத் திரும்பப் பெறும் திட்டம் நாளை முதல் அமல்

Published On:

| By Pandeeswari Gurusamy

சென்னையில் உள்ள டாஸ்மாக் கடைகளில் காலி பாட்டில்களைத் திரும்பப் பெறும் திட்டம் நாளை (ஜனவரி 6) முதல் அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “டாஸ்மாக் லிட்., சென்னை (வடக்கு, தெற்கு, மத்திய) மாவட்டத்தில் காலி மதுபாட்டில்களைத் திரும்பப் பெறும் திட்டம் 06-01-2026 முதல் அமல்படுத்தப்பட உள்ளது.

ADVERTISEMENT

வாடிக்கையாளர்கள் மது அருந்திவிட்டு காலி மதுபாட்டில்களை பொது இடங்களில் வீசுவதைத் தவிர்க்கும் பொருட்டு, அவற்றை மதுபானக் கடைகளிலேயே திரும்பப் பெறும் திட்டத்தின்படி, மதுபாட்டில்களை வாங்கும் போது ஒவ்வொரு மதுபாட்டிலுக்கும் ரூ.10/- கூடுதலாகப் பெற்று, மது அருந்திவிட்டு காலி மதுபாட்டில்களைத் திரும்ப அதே மதுபான விற்பனைக் கடையில் ஒப்படைக்கும் போது ஏற்கனவே செலுத்திய ரூ.10/-ஐ திரும்பப் பெற்றுக்கொள்ளலாம். இத்திட்டத்தின் நோக்கம், காலி மதுபாட்டில்களை பொது இடங்களில் வீசி சுற்றுச்சூழல் மாசுபடுவதைத் தடுப்பதாகும்.” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share