நீட் 2026: எம்பிபிஎஸ் சீட் கன்ஃபார்ம் ஆகணுமா? இந்த மார்க் தான் ‘டார்கெட்’… மிஸ் பண்ணிடாதீங்க!

Published On:

| By Santhosh Raj Saravanan

neet ug 2026 target marks tamilnadu mbbs cutoff details

“டாக்டர் கோட் போடணும்… கழுத்துல ஸ்டெதஸ்கோப் மாட்டணும்…” என்ற கனவோடு, இரவு பகல் பார்க்காமல் படிக்கும் மாணவர்களா நீங்கள்? ஆனால், வருஷம் ஆக ஆக நீட் போட்டியும், கட்-ஆஃப் மார்க்கும் ராக்கெட் வேகத்தில் போய்கிட்டே இருக்கு!

2026ல் நீட் எழுதப்போகும் மாணவர்களுக்கு ஒரு ‘அலர்ட் ரிப்போர்ட்’ இது. இப்போதே உஷாரானால் தான் டாக்டர் கனவு நனவாகும்!

ADVERTISEMENT

எகிறும் போட்டி… எகிறும் கட்-ஆஃப்!

தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் (Govt Medical Colleges) சேர்வது தான் பலருடைய லட்சியம். ஏன்னா, குறைவான கட்டணம், தரமான படிப்பு. ஆனால், அங்கே சீட் கிடைப்பது அவ்வளவு ஈஸி இல்லை.

ADVERTISEMENT
  • கடந்த 2024 மற்றும் 2025 நிலவரத்தைப் பார்த்தாலே தலை சுற்றுகிறது. 600 மார்க் எடுத்தாலே சீட் கிடைக்குமா என்பது சந்தேகமாகிவிட்டது.
  • கேள்வித்தாள் எளிமையாக இருந்தால் கட்-ஆஃப் தாறுமாறாக உயரும். கடினமாக இருந்தால் கொஞ்சம் குறையலாம். ஆனால், “நம்ம டார்கெட் எப்போதுமே உச்சத்தில் தான் இருக்கணும்”.

2026க்கான ‘சேஃப் ஸ்கோர்’ (Safe Score) என்ன?

அரசு மருத்துவக் கல்லூரியில் ஒரு சீட் நிச்சயம் வேண்டுமென்றால், நீங்கள் குறிவைக்க வேண்டிய குறைந்தபட்ச மதிப்பெண்கள் (Target Marks) இதோ:

ADVERTISEMENT
  • பொதுப்பிரிவு (OC): நீங்கள் ஓசி பிரிவில் இருந்தால், 665 முதல் 670 மதிப்பெண்களுக்கு மேல் எடுப்பது பாதுகாப்பானது. காம்படிஷன் அந்த அளவுக்கு ஹெவியாக இருக்கிறது!
  • பிசி (BC) & பிசிஎம் (BCM): பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்கள் குறைந்தபட்சம் 655 – 660 மதிப்பெண்களை டார்கெட் செய்வது அவசியம்.
  • எம்பிசி (MBC/DNC): மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 635 – 640 மதிப்பெண்கள் இருந்தால் தான் டாப் கல்லூரிகளை நெருங்க முடியும்.
  • எஸ்சி (SC) & எஸ்சிஏ (SCA): 560 முதல் 580 மதிப்பெண்களுக்கு மேல் எடுப்பது அரசு மருத்துவ இடத்திற்கு உத்தரவாதம் தரும்.
  • எஸ்டி (ST): பழங்குடியினர் பிரிவில் இருந்தாலும், 480 – 500 மதிப்பெண்களை இலக்காக வைத்துப் படிப்பது நல்லது.

கட்-ஆஃப் மார்க் பார்த்து பயப்படாதீங்க. ஸ்மார்ட்டா பிளான் பண்ணுங்க!

  • பயாலஜி தான் பலம்: 360க்கு 340+ எடுப்பது பயாலஜியில் மிக அவசியம். இதுதான் உங்கள் மொத்த ஸ்கோரைத் தூக்கி நிறுத்தும். என்.சி.இ.ஆர்.டி (NCERT) புத்தகங்களை வரி விடாமல் படியுங்கள்.
  • இயற்பியல் (Physics) கஷ்டமா?: பல மாணவர்கள் பிசிக்ஸில் தான் சறுக்குகிறார்கள். அங்கே நீங்கள் ஸ்ட்ராங்காக இருந்தால், கட்-ஆஃப் ரேஸில் மற்றவர்களை முந்திவிடலாம்.
  • டெஸ்ட் எழுதிப் பாருங்க: முழு சிலபஸை முடிப்பது மட்டும் போதாது. வாரத்திற்கு ஒருமுறையாவது ‘ஃபுல் மாடல் டெஸ்ட்’ எழுதிப் பார்த்தால் தான், டைம் மேனேஜ்மென்ட் வரும்.

இன்னும் டைம் இருக்குனு அசால்ட்டா இருக்காதீங்க. இப்போ தொடங்குனா தான் 2026ல் டாக்டர் சீட் உங்கள் கையில்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share