நூற்றாண்டுக்கு பிறகு முதல்முறையாக… வாடிகனுக்கு வெளியே அடக்கம் செய்யப்பட்ட போப் பிரான்சிஸ் உடல்!

Published On:

| By christopher

the reason behind pope francis body buried outside of vatican

மறைந்த போப் பிரான்சிஸ் உடலானது அவரது விருப்பப்படியே வாடிகனுக்கு வெளியே உள்ள புனித மேரி பசிலிக்கா பேராலயத்தில் இன்று (ஏப்ரல் 26) அடக்கம் செய்யப்பட்டது. the reason behind pope francis body buried outside of vatican

உலகம் முழுவதும் உள்ள கத்தோலிக்க கிறிஸ்துவர்களின் தலைவராக போப் (திருத்தந்தை) கருதப்படுகிறார். இந்த நிலையில் 266வது திருத்தந்தையாக இருந்த போப் பிரான்சிஸ், ஈஸ்டர் திருநாளுக்கு மறுநாள் கடந்த 21ஆம் தேதி வயது (88) முதிர்வால் ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக வாடிகனில் மரணம் அடைந்தார்.

இதனையடுத்து அவரது உடல் கடந்த 23ஆம் தேதி முதல் வாடிகனில் உள்ள புனித பீட்டர் பேராலயத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

இந்தியத் தலைவர்கள் அஞ்சலி! the reason behind pope francis body buried outside of vatican

அதன்படி கடந்த 3 நாட்களாக உலகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான மக்கள் போப் பிரான்சிஸ் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர்.

தமிழ்நாடு அரசு சார்பில் அமைச்சர் நாசர் மற்றும் திருச்சி கிழக்குத் தொகுதி எம்.எல்.ஏ இனிகோ இருதயராஜ் உள்ளிட்டோர் நேற்று வாடிகனுக்கு சென்று போப் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர்.

அதே போன்று இந்திய அரசு சார்பில் வாடிகனுக்கு சென்றிருந்த இந்திய குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு நேற்று போப் பிரான்சிஸ் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார்.

புனித பீட்டர் சதுக்கம் நிரம்பியது! the reason behind pope francis body buried outside of vatican

இந்த நிலையில் புனித பீட்டர் சதுக்கத்தில் உலக நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள், பாதிரியார்கள், கன்னியாஸ்திரிகள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் அவரது இறுதி அஞ்சலி திருப்பலி இந்திய நேரப்படி இன்று மதியம் 1 மணியளவில் தொடங்கியது.

லட்சக்கணக்கானோர் திரண்டிருந்த புனித பீட்டர் சதுக்கத்தில், இறுதி திருப்பலியை கார்டினல்கள் கல்லூரி முதல்வரான கார்டினல் கியோவானி பாட்டிஸ்டா ரே நிறைவேற்றினார்.

புனித பீட்டர் பேராலயத்தில் இறுதிச் சடங்குகளை முடித்து, வாடிகனுக்கு வெளியே கொண்டு வரப்பட்ட போப் பிரான்சிஸ் உடலானது, அவரது விருப்பப்படியே அவருக்கு மிகவும் பிடித்தமான புனித மேரி மேஜர் பசிலிக்கா பேராலயத்திற்கு (Basilica di Santa Maria Maggiore) காரில் ஏற்றிக் கொண்டு செல்லப்பட்டது.

வழியெங்கும் சாலையின் இருப்பக்கத்திலும் நின்றபடி திரளான மக்கள் அவரது உடலுக்கு கண்கலங்க அஞ்சலி செலுத்தினர்.

தொடர்ந்து பசிலிசிக்கா பேராலாயத்திற்குள் கொண்டுவரப்பட்ட போப் பிரான்சிஸ் உடலானது, அவர் அடிக்கடி பிரார்த்தனை செய்யும் புனித மேரியின் படத்துக்கு அருகே எளிய முறையில் அமைக்கப்பட்ட கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டது.

இத்தாலியின் ரோமில் உள்ள புனித மேரி மேஜர் பசிலிக்கா பேராலயத்தின் ஒரு பகுதி.

இதனையடுத்து வாடிகன் ஏற்கெனவே தெரிவித்தபடியே, தனது பதவிக்காலம் முழுவதும் அடித்தட்டு மக்களின் முன்னேற்றத்துக்காக போப் பிரான்சிஸ் பாடுபட்டதை நினைவு கூரும் வகையில், புனித மேரி பசிலிக்காவில் ஏழைகள் மற்றும் கைவிடப்பட்டோரை கொண்ட ஒரு குழு அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தியது.

நூற்றாண்டுக்கு பிறகு முதல்முறை! the reason behind pope francis body buried outside of vatican

பொதுவாக தங்களது பதவி காலத்தில் மறையும் திருத்தந்தையரின் உடலானது, வாடிகன் நகரில் உள்ள புனித பீட்டர் பேராலயத்தின் கீழ்ப் பகுதியில் அடக்கம் செய்யப்படுவது வழக்கம்.

இந்த நிலையில் வழக்கத்திற்கு மாறாக வாடிகானில் இருந்து இரண்டு மைல் தொலைவில் உள்ள புனித மேரி பசிலிக்காவில், எந்தவித ஆடம்பரமும் இல்லாத எளிய கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டுள்ளார் போப் பிரான்சிஸ்.

இங்கு ஏற்கெனவே உயிரிழந்த 7 திருத்தந்தையர்களின் உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. கடைசியாக 1669ஆம் ஆண்டு உயிரிழந்த போப் ’கிளமென்ட் IX’ புனித மேரி பசிலிக்காவில் அடக்கம் செய்யப்பட்ட போப் ஆவார்.

வாடிகனுக்கு வெளியே லேட்டரானோவில் உள்ள பசிலிக்கா டி சான் ஜியோவானியில் 1903 இல் இறந்த லியோ XIII அடக்கம் செய்யப்பட்டார்.

எனினும் கடந்த நூற்றாண்டுக்கு பிறகு முதல்முறையாக வாடிகானுக்கு வெளியே அடக்கம் செய்யப்படும் முதல் போப் என்ற பெயரை பெற்றுள்ளார் பிரான்சிஸ்.

the reason behind pope francis body buried outside of vatican
பேராலயத்தில் உள்ள புனித மரியாவின் திருப்படம் முன்பு பிரார்த்தனை செய்யும் போப் பிரான்சிஸ் (File)

போப் பிரான்சிஸ் விருப்பம்! the reason behind pope francis body buried outside of vatican

இயேசுவின் தாய் மரியாவின் மீது கொண்ட ஆழ்ந்த பக்தியின் காரணமாக, தான் அடிக்கடி செல்லும் புனித மேரி பசிலிக்காவில் அடக்கம் செய்யவேண்டும் என கோரியுள்ளார்.

இதுதொடர்பாக தனது உயிலில், “எனது கல்லறையானது எளிமையான முறையில், எந்தவித அலங்காரமும் இன்றி ஏற்பாடு செய்யப்பட வேண்டும். எனது அடக்கத்திற்கான செலவுகள் ஒரு பயனாளி வழங்கும் தொகையால் ஈடுசெய்யப்படும்” என்று அதில் கூறியுள்ளார்.

மேலும் கடந்த டிசம்பர் 2023ஆம் ஆண்டு, ’புனித மேரி பசிலிக்காவில் அடக்கம் செய்யப்பட வேண்டும்’ என்ற தனது விருப்பத்தை வெளிப்படுத்தினார்.

அப்போது அவர், “மிகுந்த பக்தியின் காரணமாக புனித மேரி பசிலிக்காவுடன் “மிக வலுவான தொடர்பை” உணர்கிறேன். நான் இங்கு அடக்கம் செய்யப்பட விரும்புகிறேன். அதற்கான இடம் தயாராகவே உள்ளது. நான் எனது இறுதிச் சடங்குகளை மிகவும் எளிமைப்படுத்தி, புதிய முறையை அறிமுகப்படுத்துவேன்” என்று புன்னகையுடன் கூறினார்.

மே 2013ல், புனித மேரி மேஜர் பசிலிக்கா பேராலயத்தில் ஜெபமாலை பிரார்த்தனையில் ஈடுபட்ட போப் பிரான்சிஸ்.

பசிலிக்கா பேராலயத்துடன் நெருக்கம்! the reason behind pope francis body buried outside of vatican

கடந்த 2013ஆம் ஆண்டு மே மாதம் 266வது போப் ஆக தேர்ந்தெடுக்கப்பட்டதும், முதன்முறையாக புனித மேரி பசிலிக்காவில் பிரார்த்தனை செய்த பின்னர் தான் பிரான்சிஸ் தனது பணி வாழ்க்கையை தொடங்கினார்.

அதன்பின்னர் தனது ஒவ்வொரு வெளிநாட்டுப் பயணங்களுக்கு முன்னும் பின்னும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பின்னரும் பிரார்த்தனை செய்வதற்காக அடிக்கடி பசிலிக்காவிற்கு அவர் சென்றதுண்டு.

இதன்மூலம் தனது இதயத்திற்கு மிக நெருக்கமான, தான் ஆசைப்பட்ட இடத்திலேயே இன்று அடக்கம் செய்யப்பட்டுள்ளார் போப் பிரான்சிஸ்.

தனது வாழ்நாள் முழுவதும், ஆடம்பரங்களைத் தவிர்த்து வந்த போப் பிரான்சிஸ், தனது இறப்பிலும், இறுதிச் சடங்கிலும் எளிமையை கையாண்டுள்ளது உலக மக்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share