பஹல்காம் தீவிரவாத தாக்குதல் வழக்கை தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) விசாரித்து வருகிறது. Pahalgam terror attack case
கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இந்தியாவையே உலுக்கிய இந்த சம்பவத்தை தொடர்ந்து, பாகிஸ்தான் மீது இந்தியா நடவடிக்கை எடுத்து வருகிறது.
அதுபோன்று இந்த தாக்குதலுக்கு பதிலடி தரும் நடவடிக்கையில் இறங்கியுள்ள இந்திய ராணுவம் காஷ்மீரில் தீவிரவாதிகளை தேடி வருகிறது.
லஷ்கர் இ தொய்பா இயக்கத்தை சேர்ந்த அடில் உசேன் தோகர், ஆஷிப் ஷேக் உள்ளிட்ட முக்கிய தீவிரவாதிகளின் வசிப்பிடங்கள் தேடி அழிக்கப்பட்டது.

தொடர்ந்து தீவிரவாதிகளின் மறைவிடத்தை கண்டறிந்து அழித்து வருகின்றனர்.
இந்தநிலையிம் பஹல்காம் தாக்குதல் வழக்கை மத்திய உள்துறை அமைச்சகம் என்.ஐ.ஏ.விடம் ஒப்படைத்துள்ளது. எற்கனவே என்.ஐ.ஏ அதிகாரிகள் அங்கு முகாமிட்டிருந்த நிலையில் இன்று (ஏப்ரல் 27) முறையாக வழக்கு குறித்த முக்கிய ஆவணங்கள், எப்.ஐ.ஆர். நகல் ஆகியவற்றை என்.ஐ.ஏ. அதிகாரிகளிடம் காஷ்மீர் போலீசார் ஒப்படைத்தனர்.Pahalgam terror attack case
இந்தசூழலில் சம்பவம் நடந்த இடத்தில் என்.ஐ.ஏ அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
என்.ஐ.ஏ விசாரணை அமைப்பின் ஐஜி, டிஐஜி மற்றும் எஸ்பி ஆகியோரின் மேற்பார்வையில் அதிகாரிகள் சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சிகளிடம் விசாரித்து வருகின்றனர்.
தடயவியல் மற்றும் பிற நிபுணர்களின் உதவியுடன் என்.ஐ.ஏ குழு பஹல்காம் பகுதி முழுவதையும் தனது கட்டுப்பாட்டில் எடுத்திருக்கிறது. Pahalgam terror attack case
