குன்னூரில் இரவு நேரத்தில் மளிகை கடையை உடைத்து கரடி ஒன்று திண்பண்டங்களை ருசி பார்த்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ள நிலையில் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் தொடர்ச்சியாக கரடிகள் நடமாட்டம் அதிகரித்த வண்ணம் உள்ளது. குடியிருப்பு பகுதிகள், தேயிலை தோட்ட பகுதிகளில் உலா வரும் கரடிகள் சமீபகாலமாக இரவு நேரங்களில் குடியிருப்பு பகுதிக்குள் வீடுகளை உடைத்து சேதப்படுத்துவது வாடிக்கையாகி வருகிறது. மேலும் இரவில் பூட்டி இருக்கும் கடைகளுக்குள் நுழைந்து விடுகின்றன.
இந்த நிலையில் குன்னூர் அருகே உள்ள கேட்டில் பவுண்ட் பகுதியில் நுழைந்த கரடி ஒன்று அங்கிருந்த மளிகை கடையின் கதவை உடைத்து அங்குள்ள திண்பண்டங்களை ருசி பார்த்துள்ளது. இந்த காட்சி அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவானது.
தொடர்ச்சியாக மக்களுக்கு தொல்லை கொடுக்கும் கரடியை கூண்டு வைத்து பிடிக்க அப்பகுதி பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
