தொழில் செய்ய உகந்த மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு!

By Minnambalam

|

Published on 2 Jul 2022, 3:45 PM

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், டெல்லியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில், தொழில் செய்ய உகந்த மாநிலங்கள் தரவரிசை பட்டியலை வெளியிட்டார். தொழில் செய்ய உகந்த மாநிலங்களின் தர வரிசையில் முதல் ஏழு மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு இடம் பெற்றுள்ளது.

2020 ஆம் ஆண்டின் வர்த்தக சீர்திருத்த செயல் திட்டத்தை அமல்படுத்தியதன் அடிப்படையில், இந்த தரவரிசை முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில், அதிகமாக சாதித்த மாநிலங்களாக ஏழு மாநிலங்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. அந்தப் பட்டியலில் தமிழ்நாடு இடம்பெற்றுள்ளது. ஆந்திரா, குஜராத், தெலங்கானா, அரியானா, கர்நாடகா, பஞ்சாப் ஆகியவை மற்ற 6 மாநிலங்கள் ஆகும்.

ADVERTISEMENT
Nirmala S Raman

சாதிக்க துடிக்கும் மாநிலங்களாக அசாம், கேரளா, கோவா, சத்தீஸ்கார், ஜார்கண்ட், ராஜஸ்தான், மேற்கு வங்காளம் ஆகிய ஏழு மாநிலங்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

உருவெடுத்து வரும் வர்த்தக மாநிலங்களாக புதுச்சேரி உள்பட 11 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Minnambalam

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel