ஸ்மோக் பிஸ்கட் உயிருக்கு ஆபத்து: உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை!

Published On:

| By Selvam

திரவ நைட்ரஜன் மூலம் தயாரிக்கப்படும் ஸ்மோக் பிஸ்கட் உயிருக்கு ஆபத்தானது என்று உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஆய்வுக்கூடங்களில் பொருட்களை மிகவும் குளிர்சியான சூழலில் பதப்படுத்துவதற்கு பயன்படுத்தப்படும் திரவ நைட்ரஜன் அறை வெப்ப நிலையில் வாயுவாக மாறும் தன்மையுடையது.

இதனை பயன்படுத்தி சிறுவர்கள் மற்றும் குழந்தைகளை கவர்வதற்காக ஸ்மோக் பிஸ்கட், ஸ்மோக் பீடா போன்றவை  பொருட்காட்சிகள் மற்றும் உணவு விடுதிகளில் விற்பனை செய்யப்படுகிறது.

இந்தநிலையில், கர்நாடக மாநிலம் தாவணகெரேவில் ஸ்மோக் பிஸ்கட் சாப்பிட்ட சிறுவன் வலியால் துடிதுடித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதனையடுத்து தமிழகத்தில் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கு ஸ்மோக் பிஸ்கட்களை கொடுக்க வேண்டாம் என்று உணவு பாதுகாப்புத்துறை எச்சரித்துள்ளது.

மேலும், திரவ நைட்ரஜனால் தயாரிக்கப்படும் உணவு பொருட்களால் திசுக்கள் உறைந்து இரைப்பை குழாயை சிதைக்ககூடும், கண் பார்வை, பேசும் திறன் பறிபோகும், உயிரிழப்புகள் ஏற்படலாம்.

விதிமுறைகளை மீறி திரவ நைட்ரஜன் பயன்படுத்திய உணவுப்பொருட்களை விற்பனை செய்தால், 10 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என்று உணவு பாதுகாப்புத்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும், சென்னையில் ஸ்மோக் பிஸ்கட் விற்பனை செய்யும் இடங்களில் ஆய்வு செய்யவும் உத்தரவிட்டப்பட்டுள்ளது.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

Fact Check: முஸ்லீம்கள் அதிக குழந்தை பெற்றுக் கொள்கிறார்களா? மோடி சொல்வது உண்மையா?

67 மருந்துகள் தரமற்றவை : சிடிஎஸ்சிஓ அறிவிப்பு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share