67 மருந்துகள் தரமற்றவை : சிடிஎஸ்சிஓ அறிவிப்பு!

Published On:

| By christopher

CDSCO announced 67 drugs are substandard

வலி, காய்ச்சல், சளித் தொற்று உள்ளிட்ட பாதிப்புகளுக்காக பயன்படுத்தப்படும் 67 மருந்துகளை ’தரமற்றவை’ என மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படும் அனைத்து வகை மருந்து – மாத்திரைகளும் மத்திய மற்றும் மாநில மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியங்கள் மூலம் ஆய்வு செய்யப்படுகின்றன.

அப்போது கண்டுபிடிக்கப்படும் போலி மருந்துகள் மற்றும் அதனை தயாரித்த நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அதன்படி, கடந்த மாதத்தில் மட்டும் மருந்து உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் விற்பனையகங்களில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை மூலம் 931 மருந்துகளின் மாதிரிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.

அவற்றில் வலி, காய்ச்சல், ஜீரண மண்டல பாதிப்பு, சளித் தொற்று, கிருமித் தொற்று, வைட்டமின் குறைபாடு உள்ளிட்ட பாதிப்புகளுக்கு பயன்படுத்தப்படும் 67 மருந்துகள் தரமற்றவையாக இருந்தது கண்டறியப்பட்டது.

அந்த மருந்துகளில் பெரும்பாலானவை மேற்குவங்கம், ஹிமாசலப் பிரதேசம், உத்தரகண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் தயாரிக்கப்பட்டவை. மேலும் அவற்றில் ஒரு மருந்து தவறான வா்த்தக பெயருடன் விற்பனைக்கு இருந்ததும் தெரியவந்துள்ளது.

அதனையடுத்து அதன் விவரங்களை மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியத்தின் இணையப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மருந்து கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

CSK vs LSG: முத்துப்பாண்டிய அடிச்சுப்புட்டானய்யா… மீம்ஸ் போட்டு ரசிகர்கள் கிண்டல்!

”சிறுபான்மையின மக்களுக்கு எதிரானவராக மோடியை சித்தரிக்கிறார்கள்” : தமிழிசை

 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel