புதுச்சேரி 2026 சட்டமன்றத் தேர்தல்: பாஜக நட்சத்திரப் பேச்சாளர்கள் பட்டியலில் தமிழிசை பெயர் நீக்கம் – பின்னணி என்ன?

Published On:

| By Pandeeswari Gurusamy

Tamilisai Soundararajan

புதுச்சேரியில் நடைபெற உள்ள 2026-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கான பாரதிய ஜனதா கட்சியின் நட்சத்திரப் பேச்சாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில், முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனின் பெயர் நீக்கப்பட்டுள்ள விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

தமிழிசை சௌந்தரராஜன் புதுச்சேரியின் துணைநிலை ஆளுநராகப் பதவி வகித்தபோது, அவர் மீது பல்வேறு ஊழல் புகார்கள் எழுப்பப்பட்டன. இந்நிலையில், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்கும் நட்சத்திரப் பேச்சாளர்கள் பட்டியலை பாஜக தலைமை வெளியிட்டுள்ளது.

ADVERTISEMENT

இந்தப் பட்டியலில் மத்திய இணை அமைச்சர் எல். முருகன், தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட முக்கியத் தலைவர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. கடந்த 2024-ம் ஆண்டு தேர்தலின் போது நட்சத்திரப் பேச்சாளர் பட்டியலில் இடம்பெற்றிருந்த தமிழிசையின் பெயர், தற்போது நீக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி, இலவச லேப்டாப் வழங்கும் திட்டத்தில் தமிழிசை முறைகேடு செய்ததாகப் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியிருந்தார். மேலும், ஆளுநர் மாளிகை நிதியைத் தனது சொந்தச் செலவுகளுக்காகப் பயன்படுத்தியது உள்ளிட்ட பல ஊழல் குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்பட்டன.

ADVERTISEMENT

எனவே, இந்தத் தேர்தலில் தமிழிசையின் பிரசாரம் பாஜகவிற்குப் பின்னடைவை ஏற்படுத்தக்கூடும் என்ற அச்சத்தால் அவரது பெயர் விடுவிக்கப்பட்டிருக்கலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share