மோகன்லால் உடன் நடித்த தமிழ் சீரியல் நடிகை!

Published On:

| By uthay Padagalingam

Tamil serial actress who starred with Mohanlal!

தமிழில் வள்ளி, அபியும் நானும், அயலி சீரியல்கள் வழியே ரசிகர்களுக்கு அறிமுகமானவர் வித்யா வினு மோகன். அந்தந்த சீரியல்களில் வரும் நாயகி பாத்திரத்தைக் கொண்டு இவரை விளிப்பவர்கள் இன்றும் உள்ளனர். அப்படிப்பட்ட புகழைப் பெற்றிருக்கிற வித்யா, சுமார் பதினாறு ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு மலையாளப் படத்தில் நடித்தார். அதில் நாயகனாக இடம்பெற்றவர் மோகன்லால். Tamil serial actress who starred with Mohanlal!

அது மட்டுமல்ல, அந்த படத்தின் கதையும் கூட அவர் எழுதிய ‘தர்ப்பணம்’ எனும் சிறுகதையை அடிப்படையாகக் கொண்டது. அந்த படத்தின் பெயர் ‘ஸ்வப்னமாலிகா’. இப்படம் உருவாகிச் சரியாக 16 ஆண்டுகள் ஆகின்றன. வரும் அக்டோபர் மாதம் இப்படம் தியேட்டர்களில் வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

தமிழில் ஷிவானி ஸ்ரீ என்ற பெயரில் ‘தண்டாயுதபாணி’, ’ஆறாவது வனம்’, ‘கருவறை’, ‘அகிலன்’, ‘நேர் எதிர்’ படங்களில் ஏற்கனவே நடித்திருக்கிறார் ஷிவானி. சில மலையாளப் படங்களிலும் நடித்திருக்கிறார். அந்த வரிசையில் ஒன்றாக இடம்பெறுகிறது ‘ஸ்வப்னமாலிகா’.

கே.ஏ.தேவராஜன் எனும் வழக்கறிஞர் இப்படத்தை இயக்கியிருந்தார். இவர் கடந்த ஆண்டு மறைந்தார். இவரது மகள் அபர்ணா இப்படத்தில் பாடல்களை எழுதியிருக்கிறார்.

இப்படத்தில் மோகன்லால், வித்யா வினு மோகன் உடன் மறைந்த கலைஞர்களான திலகன், இன்னோசண்ட், சுகுமாரி ஆகியோர் நடித்துள்ளனர். மேலும் கோட்டயம் நசீர், குளப்புள்ளி லீலா, ஷம்மி திலகன் உள்ளிட்ட பலர் இதில் தோன்றியிருக்கின்றனர்.

இவர்களோடு எலீனா எனும் இஸ்ரேல் நடிகையும் இதில் இடம்பெற்றிருக்கிறாராம்.

பெரும் கவன ஈர்ப்போடு உருவான ‘ஸ்வப்னமாலிகா’ சில காரணங்களால் தியேட்டர்களில் வெளிவராமல் போனது. திடீரென்று பதினாறு ஆண்டுகள் கழித்து இப்படம் வெளியாவது மோகன்லால் ரசிகர்களுக்கே ஆச்சர்யம் தரும் விஷயம் தான். அது அதிர்ச்சியாக மாறுமா, இல்லையா என்பது படம் பார்த்தபிறகுதான் தெரிய வரும்..!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share