நல்லவேள இத பாக்க திருவள்ளுவர் இல்ல – அப்டேட் குமாரு

Published On:

| By christopher

update kumaru memes and trolls july 16

இன்னைக்கு டீக்கடைக்கு போயிருந்தேன். அங்க ஒருத்தன் ஏதோ பெரிய கவிஞர் மாதிரி நோட்பேட், பேனா சகிதம் பெருசா யோசிச்சி எழுதிக்கிட்டு இருந்தான்.

பக்கத்துல போனதும், ”அண்ணே நான் முடிவு பண்ணிட்டேன். இனி புதுசு புதுசா திருக்குறள் எழுத போறேன்’னு சொன்னான்.

ADVERTISEMENT

’என்னடா பேசுற.. திருக்குறள் எழுதனும்னா, நல்லா தமிழ்புலமை இருக்கனும், அனுபவம் இருக்கனும், உனக்கு அப்படி ஒன்னும் கிடையாதடா’னு கேட்டேன்.

அதுக்கு அவன், “யாருணே நீங்க… நம்ம ஆளுநர் ரவி தெரியும்ல… திருக்குறள்ல இல்லாத ஒரு குறள அவார்டுல பிரிண்ட் அடிச்சி, அதை சிறந்த டாக்டர்களுக்கு வேற கொடுத்துருக்காரு. இரண்டு வரி,
மேல ஒரு நாலு வார்த்தை… கீழ ஒரு மூனு வார்த்தை.. அவ்வளவு தான் திருக்குறள். அதனால இனி நான் தான் திருவள்ளுவர்’னு சொல்லிட்டு நோட்டுல செதுக்க ஆரம்பிச்சிட்டான்.

ADVERTISEMENT

’ஆள விடுறா சாமி’னு அங்கிருந்து கிளம்பி வந்துட்டேன். update kumaru memes and trolls july 16

நீங்க அப்டேட்ஸ் பாருங்க… update kumaru memes and trolls july 16

ADVERTISEMENT

Mannar & company™🕗

ஆடிக்கு உங்க பொண்ணா எப்ப அழைச்சிட்டு போவீங்க?

மாப்ள உங்களுக்கு கல்யாணம் ஆகி பத்து வருசங்களுக்கு மேல ஆச்சுப்பா.. அதெல்லாம் அவ்வளோ தான்!

#ஆடி

Sasikumar J

800 மதுபாட்டில்களை எலிகள் குடித்துவிட்டதாக கூறிய மதுபானக்கடை ஊழியர்கள் சொன்னது கேட்டு அதிகாரிகள் அதிர்ச்சி.
– செய்தி

எலி ~ மூடி உங்களாயே திறக்க முடியாது நான் எப்படி திறக்க போறேன்…!

vijaychakkaravarthy

உடம்ப fit ah வச்சுக்குற எண்ணம் சாப்பிடுறப்ப வர்றத விட,

பிடிச்ச ட்ரெஸ்ஸ போட்டு பாக்கும் “trial roomல ” தான் அதிகமா வருது…

Mannar & company™🕗

பொண்டாட்டி கேட்பதையெல்லாம் வாங்கி கொடுத்து சமாளிக்கிறவன் பெரிய மனுஷன் இல்ல,
வாங்கிக் கொடுக்குறேன்னு சொல்லி சொல்லி சமாளிக்கிறான் பாரு அவன்தான் பெரிய மனுஷன்!

Vasu Devan

பள்ளி/கல்லூரிகளில் கடைசி பெஞ்சில் படிக்கிறவர்களைப் பற்றிய கண்ணோட்டமே வேறு. உருப்படாதவர்கள், போக்கிரிகள், ஸ்ட்ரைக்கில் பங்கு கொள்கிறவ்ர்கள், மதிப்பெண் எடுக்காதவர்கள் போன்ற எதிர்மறையான பார்வைகள் பலருக்கு உண்டு. குறிப்பாக, பல ஆசிரியர்களுக்கே இந்த பார்வை உண்டு. பள்ளியிலும் வகுப்பறையின் பெயரும் மாணவர்களின் சேர்க்கையை பொருத்து அதிகரிக்கும். 10A , 10B, 10C, 10D ……என இது நீளும். முதல் ஓரிண்டு வகுப்பறைக்கு வழங்கும் முக்கியத்துவம் க்ளாஸ் 10E, 10F படிக்கிற மாணவர்களுக்கு கிடைக்காது. இம்மாதிரி க்ளாஸ் 10E, 10F படிக்கும் மாணவர்கள் அடிதட்டு மக்கள். கடைசி பெஞ்சில் படிக்கும் மாணவர்களும், க்ளாஸ் 10E,10F படிக்கும் மாணவர்களும் உதாசீதனப்பட்டவர்கள்.

இதையெல்லாம் நான் படிக்கிற காலத்திலேயே பார்த்திருக்கிறேன். முதல் வரிசையில் படிக்கும் மாணவர்களை பிரத்யேகமாக கவனிக்கும் ஆசிரியர்கள் உண்டு. பெரும்பாலும் முதல் பெஞ்சில் படிக்கும் மாணவர்கள் விளையாட்டு, ஸ்ட்ரைக், கட் அடித்து காலை ஷோ பார்க்க மாட்டார்கள். இதில் விற்பன்னர்கள் என்னை மாதிரி கடைசி பெஞ்சில் படித்த‌ அடாவடி பேர் வழிகள். கடைசி பெஞ்சில் படித்த என் நண்பன் டீச்சருக்கே காதல் கடுதாசி எழுதியவன். இப்போது ஏகபோகமாக ஐரோப்பாவில் வாழ்கிறான். ஏதாவது பிரச்சினை என்றால் கடைசி பெஞ்சும், க்ளாஸ் 10E, 10F மாணவர்கள்தான் முன் வருவார்கள். ஆனால் பள்ளியில் இவர்களுக்கு எந்த முக்கியத்துவமும் கிடையாது.

சில மாதங்களுக்கு முன், “ஸ்நார்த்தி ஸ்ரீகுட்டன் ” (sthanarthi sreekuttan) என்ற மலையாளம் வெளிவந்தது.(இயக்குநர் 30 வயது இளைஞர் விநேஷ் விஸ்வநாத்). நான் இன்னும் இந்தப்படத்தை பார்க்கவில்லை. கடைசி பெஞ்சு நான்கு மாணவர்களைப் பற்றிய அபாரமான படம் எனக் கேள்விபட்டேன். இந்த படத்தின் தாக்கத்தில் கேரள பள்ளிகளில் கடைசி பெஞ்சு நீக்கப்பட்டு, அரை வட்ட வடிவில் மாணவர்கள் அமர்வதற்கு ஏற்றவாறு வகுப்பறையை மாற்றி உள்ளார்கள். ஒரு திரைப்படம் மாற்றங்களை உருவாக்கும் என்பதற்கு இந்தப்படம் உதாரணம்.

ச ப் பா ணி

ஒரு புதிய ஐடியா என்பது ரொம்ப மென்மையான பொருள்.

ஒரு கேலிச்சிரிப்பு அதைக் கொன்றுவிடும்
ஒரு கொட்டாவி அதைச் சாகடித்துவிடும்
ஒரு குத்தல் பேச்சு அதைக் குத்தி வீழ்த்திவிடும்
ஒரு முறைப்பு அதன் மூச்சை நிறுத்திவிடும்

சரவணன். 𝓜

கிண்டியில் ரேஸ் கிளப் சாலையில் பசுமை பூங்கா அமைக்க இடைக்காலத் தடை போட்டுட்டாங்க..

~ தேசிய பசுமை தீர்ப்பாயம் இல்லையா?

தடை போட்டதே அவங்க தான்…

கோவிந்தராஜ்

சொந்தக்காரங்க ~ பொண்ணு கிடைச்சாலும் புதன் கிடைக்காது ….!!

மீ ~ இதே தான் சொல்றீங்க.. புதன் வார வாரம் வருது.. ஆனா எனக்கு பொண்ணுதா கிடைக்க மாட்டிங்குது ..😌

லாக் ஆஃப்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share