அதிக பட்ஜெட்டில் பிரமாண்டமாகத் தயாராகிற நட்சத்திரப் படங்களில் ஆக்ஷன் காட்சிகள் அதிகம் இருக்கும். அதற்காக, அதிக நாட்கள் படப்பிடிப்பு நடத்த வேண்டியிருக்கும். இதனால், ஒரு படத்திற்கும் அடுத்த படத்திற்குமான இடைவெளி இரண்டு ஆண்டுகள் அல்லது அதைவிட அதிகம் என்ற நிலை, ஏற்பதும் தொடர்ந்து அத்தகைய படங்களில் நடிப்பதென்பது ரசிகர்கள் உடனான அவர்களது உறவைக் குலைத்துவிடும். ’கேம் சேஞ்சர்’ படத்திற்குப் பிறகு தெலுங்கு நட்சத்திரம் ராம்சரண் இதனை நன்கு உணர்ந்திருப்பதாகத் தெரிகிறது. Ram Charans Telugu film
தற்போது அவர் ‘பெடி’ எனும் படத்தில் நடித்து வருகிறார். புஜ்ஜி பாபு சனா இயக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். ஜான்வி கபூர் நாயகியாக நடிக்கிறார். பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் நாக வம்சி இதனைத் தயாரிக்கிறார்.
சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர், ‘பெடி படத்திற்குப் பிறகு தங்களது குறுகிய காலத் தயாரிப்பொன்றில் ராம்சரண் நடிக்க இருக்கிறார்’ என்று தெரிவித்தார். அத்தகவல் தெலுங்கு திரையுலகில் அதிர்வை ஏற்படுத்தியிருக்கிறது.
சில மாதங்களில் தயாராகிற படம் எனும்போது ஆக்ஷனுக்கு பெரியளவில் முக்கியத்துவம் இருக்காது. அதேநேரத்தில் ரொமான்ஸ், சென்டிமெண்ட் சார்ந்த குடும்பப்படமாக இருக்க வாய்ப்புகள் அதிகம். இப்போது வெற்றி பெறுகிற ‘பீல்குட் ட்ராமா’ வரிசையிலும் அது இடம்பிடிக்கலாம். அப்படியிருக்கும் பட்சத்தில், அது இதர நாயகர்களின் படத்தேர்வையும் அசைத்துப் பார்க்கும் என்பதே அதற்குக் காரணம்..! Ram Charans Telugu film
வெகு விரைவில், அத்திரைப்படம் குறித்த அறிவிப்பை ராம்சரண் வெளியிடுவார் என்று எதிர்நோக்கியிருக்கிறது தெலுங்கு திரையுலகம். Ram Charans Telugu film
