தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு ஆரஞ்சு அலர்ட் மற்றும் கனமழைக்கான எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.
தென்இலங்கை மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இதனால் தமிழ்நாட்டில் அதிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
கடலூர். மயிலாடுதுறை, திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யக் கூடும் என்பதால் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம், விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
காஞ்சிபுரம், விழுப்புரம். செங்கல்பட்டு, கன்னியாகுமரி, நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் நாளை அதிக கனமழை பெய்யக் கூடும்
சென்னை, திருவள்ளூர், கடலூர். மயிலாடுதுறை. நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், இராமநாதபுரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் கனமழை பெய்யக் கூடும்.
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, இராணிப்பேட்டை விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்களில் நாளை மறுநாள் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நவம்பர் 19-ந் தேதி கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக் கூடும்.
அதிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்ட பகுதிகளில் மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
