வங்க கடலில் காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகி உள்ள நிலையில் தமிழ்நாட்டின் 4 காவிரி டெல்டா மாவட்டங்களுக்கு கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு வங்க கடல், தென் இலங்கை பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவியது. இது சனிக்கிழமை காலை காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறி உள்ளது.
இதனால் இன்று நவம்பர் 16-ந் தேதி தமிழ்நாட்டின் 4 காவிரி டெல்டா மாவட்டங்களில் அதிக கனமழை பெய்யக் கூடும் என ‘ஆரஞ்சுஅலர்ட்’ எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.
ஆரஞ்சு அலர்ட் மாவட்டங்கள்:
- கடலூர்
- மயிலாடுதுறை
- திருவாரூர்
- நாகப்பட்டினம்
இந்தப் புயல் சின்னத்தால் டெல்டா மற்றும் வடக்கு கடலோரப் பகுதிகளில் அடுத்த இரு நாட்களுக்கு கனமழை முதல் மிகக் கனமழை பொழியக்கூடும் என்பதால், மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுவையிலும் கனமழை பெய்யக் கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
